மருதமுனை எலைட் சாம்பியனாக தெரிவு.!

ருதமுனை கிரிக்கெட் சங்கம் மற்றும் மருதமுனை சப்னாஸ் ஆடையகத்தின் அனுசரணை உடன் மருதமுனை மிமா விளையாட்டு கழத்தினால் மருதமுனை மசூர் மௌலானா மைதானத்தில் அணிக்கு 11 பேர் கொண்ட 10 ஓவர் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி நடைபெற்றது. 

இச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் மருதமுனை கோல்ட்மைண்ட் விளையாட்டு கழகத்தை எதிர்த்து மருதமுனை எலைட் விளையாட்டு கழகம் 14.04.2017 இன்று மோதியது.

பல நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் நடைபெற்ற இப்பபோட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய எலைட் 10 ஓவர் நிறைவில் 111 ஓட்டங்களை பெற்றது. எலைட் சார்பாக சிபார் அரைசதம் விளாசினார். பதிலுக்கு துடுப்பெடுத்து ஆடிய கோல்ட்மைண்ட் அணியினர் 10 ஓவர்கள் நிறைவில் 85 ஓட்டங்களையே பெற்றனர். அந்த வகையில் எலைட் அணியினர் 26 ஒட்டங்களினால் மிமா 2017 கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.
எலைட் அணியினருக்கு வாழ்த்துக்கள்...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -