புதிய பதவியை ஏற்க தான் தாயார் : பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா


நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் அவசரகால நிலைமைகளில் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜனாதிபதி உருவாக்கும் பாதுகாப்பு சார் பதவியை ஏற்றுக்கொள்ள தான் தாயாராக உளதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவுத்துள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் அரசாங்கதிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த விசேட செயலணி ஒன்றை உருவாக்கி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அந்த பொறுப்பை ஏற்றுகொள்ள தயாராக உள்ளாரா என வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்.

தனக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள அமைச்சுப்பதவி இருக்கத்தக்கதாக பிரத்தியேகமாக இந்த பொறுப்பை ஏற்றுகொள்ளவேண்டும் என்றே வலியுறுத்தப்பட்டது. நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் ஏதேனும் மோசமான நிலைமைகளில் அல்லது அவசரகால நிலைமைகளில் நாட்டில் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒரு விசேட பாதுகாப்பு செயலணியை உருவாக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ள நிலையில் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள என்னை தெரிவு செய்துள்ளார். 

இவ்வாறன ஒரு பாதுகாப்பு செயலணியை உருவாக்கும் போது அதை ஏற்றுகொள்ள முடியுமா என ஜனாதிபதி என்னிடம் அமைச்சரவை கூட்டத்தில் வினவினார். அவரது கோரிக்கையை நான் ஏற்றுக்கொண்டேன். என்னால் அவ்வாறான பொறுப்புகளை ஏற்று இலகுவாக செயற்படுத்த முடியும். ஆகவே எனக்கு அவ்வாறான பொறுப்ஜபு வழங்கப்பட்டால் அதை மறுக்காது ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளேன்.

மேலும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஐக்கியத்தை உறுதிப்படுத்தி நாட்டை முன்கொண்டு செல்ல வேண்டியது அரசாங்கதின் பொறுப்பாகும். அதற்காக உருவாக்கப்பட்ட அரசாங்கத்தில் எம் அனைவருக்கும் அந்த கடமை உள்ளது. ஆனால் நாட்டின் பாதுகாப்பையும் அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் ஒருசில அரசியல்வாதிகள் முயற்சித்து வருகின்றனர். எனினும் எந்த திசையில் இவ்வாறான நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் அதை தடுத்து அரசாங்கத்தை முன்னெடுத்து செல்ல நாமும் எல்லா விதத்திலும் தயாராக இருக்க வேண்டும். அவ்வாறான நிலையில் இந்த செயலணி மிகவும் அவசியமானதாக இருக்கும்.

மேலும் இது முன்னைய ஆட்சியில் இருந்த இராணுவ ஆக்கிரமிப்பு செயற்பாடு அல்ல. நாம் ஜனநாயக ரீதியில் ஆட்சியை முன்னெடுத்து செல்கின்றோம். ஆகவே இருந்து நகர்வுகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உள்ளன. அதேபோல் அமைச்சு பொறுப்பில் இருக்கும் போது பிரத்தியேகமாக இந்த பொறுப்பை மேற்கொள்ளும் படியே இந்த யோசனை முன்வைக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -