மீதொடமுல்ல பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமைக்கு காரணம் ஒவ்வொரு அரசாங்க காலத்திலும் மேற்கொள்ளப்பட்ட கயிறிழுப்புக்கள் ஆகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
புத்தாண்டை முன்னிட்டு இன்று நடைபெற்ற தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
மீதொடமுல்ல குப்பைப் பிரச்சினையை மாகாண சபை தனக்குரியது அல்லவெனவும், அது மத்திய அரசாங்கம் தான் கருத்தில் கொள்ளவேண்டும் எனவும் கூறியது. அதேபோன்று, மத்திய அரசாங்கம் இதனை மாகாணத்துக்கு பொறுப்புச் சாட்டுகின்றது. இவ்வாறுதான் ஒவ்வொரு அரசாங்க காலத்திலும் கயிறு இழுத்தல் நடைபெறுகின்றது.
இதற்கு பாரியளவில் வேலைத்திட்டம் பற்றி யோசிப்பதனாலேயே இப்பிரச்சினை இன்னும் அதே இடத்தில் காணப்படுகின்றது. எமது அரசாங்க காலத்தில் இதற்கு தீர்வாக இப்பிரதேச மக்களுக்கு வீட்டு வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.