வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் பல வருடங்கலாக கடமை புரிந்து இவ் ஆண்டு (2017) வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியைகளுக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று (4) ம் திகதி பாடசாலையின் அதிபர் என்.எம். ஹஸ்ஸாலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கடந்த காலத்தில் குறித்த ஆசரியைகள் மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகளிலும், நிர்வாக ரீதியான செயற்பாடுகளிலும் சிறந்த முறையில் செயற்பட்டார்கள் என அதிபர் என்.எம். ஹஸ்ஸாலி தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்
இந்தப் பாடசாலையிலிருந்து வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெறப்பெற்றுச் சென்ற ஆசிரியைகள் இந்தப் பாடசாலையின் விடயத்தில் மிகவும் அக்கறையும், கரிசனையும் கொண்டவர்கள். அவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற பொறுப்புக்களை மிக நேர்த்தியான முறையில் நிறைவேற்றுபவர்கள் எனத் தெரிவித்தார்.
மதிய போசனத்தொடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந் நிகழ்வில் பிரியாவிடை பெற்றுச் செல்லும் ஆசிரியைகளுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.