திருகோணமலை கந்தளாயில் டீசலைத் திருடி விற்பனை செய்த மூவர் விளக்கமறியலில்..

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நானூறு லீற்றர் டிசலைத் திருடிய மூவரை இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க இன்று (5) உத்தரவிட்டார். 

துளசிபுரம்,திருகோணமலை, கந்தளாய் மற்றும் அரநாயக்க பகுதியைச் சேர்ந்த 45,41,மற்றும் 28 வயதுகள் உடைய மூவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 குறித்த சந்தேக நபர்கள் திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு பவுசர் ஒன்றில் டிசல் ஏற்றிச்சென்று கந்தளாய் பிரதேசத்தில் வைத்து வேறு ஒருவருக்கு திருட்டுத் தனமாக நானூறு லீற்றரைத் விற்பனை செய்த நிலையிலேயே கந்தளாய் பொலிஸார் நேற்று (4) மாலையில் கைது செய்ததாக தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்களை பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -