வயிற்றில் வலி காரணமாக சிகிச்சை பெறச் சென்ற சிறுமி, குழந்தை பெற்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சிலாபம் பகுதியில் 17 சிறுமி ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எப்படியிருப்பினும் இந்தக் குழந்தை பிறப்பிலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிலாபம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகத்தினால் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் சிறுமியின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.