A.R.A.RAHEEM-
இன்று இலங்கை முழுவதும் பேசப்பட்டு வரும் ஒரு விடயமாக வில்பத்து சம்பந்தமான பிரச்சனை காணப்படுகின்றது இப் பிரச்சனையை தொடர்ந்து இன்றயதினம் குடிநீர் தாங்கிகளை திறப்புவிழா செய்வதற்காக சிலாவத்துறை கிராமத்திற்கு அமைச்சர் ரவுப் ஹக்கீம் வருகைதந்துள்ளார் முக்கியமாக இங்கு வருவதற்கு முன்னர் தமது கூட்டங்களுக்கு மக்களை வர வைப்பதற்காக வில்பத்து தொடர்பாக தீர்வொன்றை பெறுவதற்கு ஜனாதிபதியின் செயலாளர் அவர்களை சம்பவ இடத்திற்கு அழைத்து வருவதாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார் என மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுத்தீன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
இவ்வாறு தெரிவித்த அமைச்சர் ரௌப் ஹக்கீம் அவர்கள் மரிச்சிக்கட்டியில் சுமார் 32 நாட்கள் வெயிலில் இருந்து ஆர்ப்பாட்டத்தை நடாத்தும் மக்களுக்கு தெரியாமலும் வன்னியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் போன்றவர்களுக்கும் தெரியாமல் இரகசியமான முறையில் முசலி பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை நிகழ்த்தியுள்ளார் இதன்போது அந்த நிகழ்வில் கலந்து கொண்ட புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் நவவி அவர்கள் ஜனாதிபதியின் செயலாளர் வருகைப்பற்றி கேட்ட பொழுது தான் அவ்வாறு கூறவில்லை என்று அமைச்சர் ரௌப் ஹக்கீம் தெரிவித்துள்ளார் அதுமட்டுமல்லாது முன்னாள் முசலி பிரதேச சபை உறுப்பினர் சுஃப்யான் அவர்கள் இந்த கூட்டத்தின் நோக்கம் பற்றியும் மரிச்சிக்கட்டி விவகாரம் தொடர்பில் 32 நாட்கள் கஷ்டப்படும் தங்களுக்கு தெரியாமல் எவ்வாறு நீங்கள் கூட்டம் நடத்தலாம் என்று கேள்வி எழுப்ப கூட்டத்தில் இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் அவர்களின் சகாக்கள் நியாயம் கேட்டவர்களை தாக்க முயன்றும் அங்கிருந்து வெளியேறுமாறும் கூச்சலிட்டுள்ளனர் இதனைத்தொடர்ந்து அரசாங்க இடம் என்பதனால் அங்கிருந்து சென்ற மரிச்சிக்கட்டி மக்கள் எம்மை அவமதித்த ரௌப் ஹக்கீம் அவர்கள் தங்கள் ஆர்ப்பாட்ட இடத்திற்க்கு வரக்கூடாதென தெரிவித்துள்ளனர்
இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் சென்ற மு;கா தலைவர் பின்னர் தமது முகநூலிலும் இணையங்களிலும்
தான் வில்பத்து தொடர்பாக மக்களை சந்தித்து அதற்கான தீர்வைதீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டிய நடவடிக்கை எடுப்பதக்கவும் தெரிவித்துள்ளார்
உண்மையில் அமைச்சர் ரௌப் ஹக்கீம் அவர்கள் அல்லாஹ்வுக்கு பயந்துகொள்ளவேண்டும் அவ்வாறு அவர் மறிச்சுக்கட்டிக்கு இது தொடர்பாக வருகை தந்திருந்தால் மேய்சசிக்கட்டி ஆர்ப்பாட்ட இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை காட்டட்டும் மக்களின் பசி வலி எதிர்கால முஸ்லீம்களின் நிலை தொடர்பாக எந்த அக்கறையும் கவலையும் இன்றி அரசியல் இலாபத்திற்காக செல்லும் இடங்களில் எல்லாம் பொய்யைக்கூறிக்கொண்டு திரியும் கீழ்த்தரமான செயட்பாடு அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று இந்த இடத்தில் அமைச்சர் ரௌப் ஹக்கீம் அவர்களுக்கு ஒரு சவால் விடுக்கின்றேன் 32 நாட்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்களுடன் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் இடத்தில் வைத்து எடுக்கப்பட்ட எதாவது ஒரு புகைப்படத்தை காட்டுங்கள் முடியாது ஏனென்றால் கூட்டம் சேர்ப்பதற்காக அப்பாவி மக்களின் உணர்விலும் அவர்களது கடின உழைப்பிலும் அரசியல் இலாபம் தேடும் இவர் இன்றுமட்டுமல்ல இறக்கும் வரை திருந்தப்போவது இல்லை குடிநீர் இணைப்பை வழங்கிய இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தினை எடுப்பதாக கூறுவது கண்ணை மூடிக்கொண்டு பூனை பால் குடிப்பது போன்று மனதில் ஒன்றை வைத்துக்கொள்ளட்டும் மக்கள் மடையர்கள் அல்ல