ஷொப்பிங் பேக்..!

ஷொப்பிங் பேக்
++++++++++++++

மளிகைக் கடை உயிர் நாடி.
மழைக்குத் தொப்பி.

குப்பத்துக் குழந்தையின்
கொமட்.

பயணத்தில் படிக்கம்.

தண்ணீர்க் கசிவின்
தற்காலிகத் தீர்வு.

பாத்திரம் இல்லாதோர்க்கு
பத்திரமாய் 
கஞ்சி வழங்கும்
கலயம்.

ஒட்டாது கொட்டாது
உள்ள தானியத்தை
பட்டுப் போல் அரைக்க
பாதுகாப்பு அரண்.

கைக்கு உறை.
காயத்துக்கு கட்டு.

பல்லி கொசு படாது
உள்ள பொருள் பாதுகாக்க
சொல்லி வைத்த கவசம்

பட்டம் விட
முட்டையிட
சிட்டுக்களுக்கு
சின்னக் கூட்டாளி

சூழல் ஆட்சியில்
ஒரு
ஊழல் உறுப்பினர்

கான் வழி அடைக்கும்
வீண் பழி எற்படுத்தும்
காண்ட்ரக்டர் செய்தவர்க்கு

கிழித்துப் போட்டாலும்
அழித்துப் போட முடியா
அபாயம்

ஷொப்பிங் பேக்
எல்லா வேலைகளுக்கும்
முள்ளுள்ள ஒரு ரோஜா...!
-நிழூஸ்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -