இலவசக்கல்வித் திட்டங்களினூடாக தமது கல்வித்தரத்தினை அதிகரித்துக்கொள்ள முடியும்-ஷிப்லி பாறுக்.





எம்.ரீ. ஹைதர் அலி-

ரு சமூகத்தினுடைய வளர்ச்சியில் அந்த சமூகத்தினுடைய கல்வி மட்டம் மாத்திரமே அதிகளவான செல்வாக்குச் செலுத்துகின்றது. ஆனால் துரதிஸ்டவசமாக எமது சமூகத்தில் ஆண் மாணவர்களின் கல்வியின் வளர்ச்சி வீதம் மிகவும் குறைவடைந்து கொண்டு செல்கின்றது. மாணவர்களுக்கு அவர்களின் கல்வி தொடர்பாக பிழையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுவதே இதற்கான பிரதான காரணமாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து காத்தான்குடி அன்வர் நகர் பாலர் பாடசாலைக்கு அலுமாரி மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 2017.04.11ஆந்திகதி-செவ்வாய்கிழமை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

சில தனியார் கல்வி நிறுவனங்களின் பிழையான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளின் காரணமாக ஆண் மாணவர்களுக்கு முறையான கல்வியிலுள்ள ஆர்வம் குறைவடைந்து குறுகிய கால கற்கை நெறிகளை பெற்றுக்கொள்வதில் கூடிய கவனம் செலுத்துகின்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

இவற்றின் வெளிப்பாடாக கா.பொ.த உயர்தரம் மற்றும் கா.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளில் ஆண் மாணவர்களின் பெறுபேறுகள் மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளதோடு பல்கலைகழகங்களுக்கு அதிகமாக பெண் பிள்ளைகளே தெரிவு செய்யப்படுகின்றனர்.

இலங்கை அரசாங்கமானது தனது நாட்டு பிரஜைகளுக்கு சிறந்த கல்வியினை பெற்றுக்கொடுப்பதற்காக கல்வியுடன் தொடர்புபட்டதாக பல்வேறுபட்ட விடயங்களை முன்னெடுத்து வருகின்றது.

பல்கலைகழகங்களுக்கு தெரிவு செய்யப்படாத மாணவர்களுக்காக தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் ஏனைய வெளிவாரி கற்கை நிறுவனங்களின் மூலம் பல்வேறுபட்ட கற்கை நெறிகளை முற்றிலும் இலவசமாக எமது நாட்டு அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

எனவே மாணவர்கள் தமது பணத்தினை வீண் விரயம் செய்து குறுகிய கால கற்கை நெறிகளினூடாக தமது கல்வித்தரத்தினை மட்டுப்படுத்திக் கொள்ளாமல் தமக்கு இலவசமாக அரசினால் கிடைக்கப்பெற்றுள்ள வாய்ப்புக்களை பயன்படுத்தி தமது கல்வித்தரத்தினை அதிகரித்துக் கொள்வதின் மூலம் சிறந்த எதிர்காலத்தினை அமைத்துக்கொள்ள வேண்டும் என தனது உரையில் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -