கிண்ணியா போக்குவரத்துப் பொலிஸாரினால் 09.04.2017 அன்று தாக்கப்பட்ட பெரியாற்றுமுனையைச் சேர்ந்த எஸ்.எம்.கைசர் தனக்கு நீதி நியாயம் கிடைக்க வேண்டுமென்று இன்று (12) திருகோணமலை பிராந்திய காரியாலயமான இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
குறித்த போக்குவரத்துப் பொலிஸாரினால் தான் தாக்கப்பட்டு கிண்ணியா தளவைத்தியசாலையில் மூன்று நாட்கள் சிகிச்சை பெற்று பூரண குணமடையாமல் வீடு திருப்பப்பட்டேன்.கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் தாக்குதல் நடாத்தப்பட்டமை தொடர்பாக முறைப்பாடு கூட பதிவு செய்தேன் எனக்கான தீர்வுகள் இது வரைக்கும் கிடைக்கவில்லை எனவே குறித்த போக்குவரத்துப் பொலிஸாருக்கு எதிராக இது வரைக்கும் எவ்வித சட்டநடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவே எனக்கான தீர்வினைநபெற்றுத்தருமாறு திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலய இணைப்பாளரிடம் கோரிக்கை அடங்கிய கடிதத்தை எழுத்து மூலமாக சமர்ப்பித்தார்.
கைசரின் ஆதங்கம் செய்திக்கு...
கைசரின் ஆதங்கம் செய்திக்கு...