பயங்கரவாத வன்செயலினால் சொத்துக்களை இழந்தவருக்கு நஷ்ட ஈடு வழங்கி வைப்பு.!

1989/90 ஆம் ஆண்டுகளில் பயங்கரவாத வன்செயல் காரணமாக வீடு மற்றும் சொத்துக்களை இழந்திருந்தும் இதுவரைக்காலம் நஷ்ட ஈடு வழங்கப்படாதவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், காத்தான்குடியைச் சேர்ந்த மர்ஹூம் எஸ்.எல்.வீ.பரீதா என்பவருக்கு சேரவேண்டிய நஷ்ட ஈட்டினை அவரது புதல்வரிடம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வழங்கி வைத்தார். 

ஒல்லிக்குளம், மண்முனை வீதியில் வசித்த மர்ஹூம் எஸ்.எல்.வீ.பரீதா என்பவர் 1989/90 பயங்கரவாத வன்செயலினால் தனது சொத்துக்களை இழந்திருந்தார். எனினும், அவருக்கான இழப்பீடுகள் எதுவும் உரிய முறையில் வழங்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில், 1989/90 காலப்பகுதியில் சொத்துக்களை இழந்தும் இதுவரைக் காலமும் நஷ்ட ஈடு வழங்கப்படாதவர்களுக்கு துரிதமாக நஷ்ட ஈட்டினை வழங்க புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. 

அதற்கமைய, மர்ஹூம் எஸ்.எல்.வீ.பரீதா என்பவருக்கு சேரவேண்டிய ஒன்றரை இலட்சம் ரூபா நஷ்ட ஈட்டினை அவரது புதல்வர் ஏ.ஏ.எம்.அப்ராஸ் என்பவரிடம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வழங்கி வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -