றியாத் ஏ.மஜீத்-
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் இணையத்தளஅங்குரார்ப்பன நிகழ்வும் எதிர்வரும் 08.04.2017ம் திகதி சனிக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ்வரவேற்பு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் போரத்தின் தலைவர் அல்-ஹாஜ் எம்.ஏ.பகுர்தீன்தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசிதபீ.வணிகசிங்க பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அல்-ஹாஜ்எம்.ரீ.எம்.நிசாம், கௌரவ அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் அல்-ஹாஜ்ஐ.எம்.ஹனீபா உள்ளிட்ட உயர் அதிகாரிகள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்நிகழ்வு இரண்டு கட்ட நிகழ்வாக இடம்பெறவுள்ளது. முதற்கட்ட காலை நிகழ்வாக போரத்தின்இணையத்தள அங்குரார்ப்பனம், சாய்ந்தமருது பிரதேச மக்களுக்கு சிறந்த மக்கள்பணியாற்றியவரும் ஊடயகவியலாளர்களின் நலன்களுக்கான முன்னின்று செயற்படுபவருமானமுன்னாள் பிரதேச செயலாளரும், சட்ட, ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபிவிருத்திஅமைச்சின் மேலதிக செயலாளருமான அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.சலீம், ஊடகத்துறையில் கடந்த 30வருடத்திற்கு மேலாக பணியாற்றிவரும் சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ.பீ.சிவப்பிரகாசம்,விளையாட்டுத்துறை மற்றும் ஊடகத்துறையில் கடந்த 20 வருடத்திற்கு மேலாக கடமையாற்றிவரும் ஓய்வுபெற்ற அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரியின் உடற்கல்வி விரிவுரையாளர்எம்.ஐ.எம்.முஸ்தபா ஆகியோர் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
மேலும் போரத்தின் வருடப் பூர்த்தியினை முன்னிட்டு விசேட நினைவுப் பொருள் வெளியிட்டுவைக்கப்படவுள்ளமை நிகழ்வின் விசேட அம்சமாகும்.
இதன் இரண்டாம் கட்ட நிகழ்வுகள் பகற்போசனத்தைத் தொடர்ந்து போரத்தின் 2017ம்ஆண்டுக்கான பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் போரத்தின் தலைவர் அல்-ஹாஜ்எம்.ஏ.பகுர்தீன் தலைமையில் இடம்பெறவுள்ளது.