யாழ் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களில் இருவர் நேற்று (28) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள 10 ஆவது மற்றும் 12 சந்தேகநபர்களே இவ்வாரு விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களான 10 ஆவது சந்தேக நபரான யாழ் வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த பியவர்த்தன ராஜ்குமார் (வயது-27) மற்றும் 12 ஆவது சந்தேக நபரான 65 வயது மதிக்கத்தக்க புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் ரவீந்திரன் ஆகியோராவர்.
மேலும் ஏனைய 10 சந்தேக நபர்களும் தற்போது குறித்த படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.