எச்.எம்.எம்.பர்ஸான்-
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் மாணவிகளுக்கிடையே நடைபெற்று முடிந்த மாணவ பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் சத்திபப்பிரமானம் மற்றும் மாணவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் பாடசாலையின் மண்டபத்தில் (6) ம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றறெது.
மாணவ பாராளுமன்றத்திக்கு பிரதமர்,சபாநாயகர்,பிரதிச் சபாநாயகர் போன்றோர் உட்பட மொத்தமாக அறுபது உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
ஆசிரியர் ஏ.ஜீ. அஸீசுல் ரஹீம் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு மாணவ பாராளுமன்ற தேர்தலுக்குப் பொறுப்பாக்கப்பட்ட பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் பிரதி அதிபர்களான எம்.ஐ.ஜஃபர், எம்.யூ.எம். முஹைதீன், ஆசிரியர் பாரூக் கான், பீ.என்.எம்.அஹமட் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.