மீதொட்டமுல்லை உயிர்ப்பலிகள் மீள் சுழற்சிக்குமான கண்களைத் திறந்துள்ளது.!

ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மீதொட்டமுல்லையில் சமீபத்தில் இடம்பெற்ற உயிர்ப்பலிகள் இலங்கையில் உயிர்வாயுத் தொழினுட்பத்திற்கும் திண்மக் கழிவு முகாமைத்துவம் மற்றும்; மீள் சுழற்சிக்குமான கண்களைத் திறந்துள்ளதாக றுஹுனு பல்கலைககழக பேராசிரியர் கே.டி.என் வீரசிங்ஹ Professor Emeritus K.D.N. Weerasinghe, Ruhuna University தெரிவித்தார்.

ஜனதாக்ஸன் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உயிர்வாயுத் தொழினுட்பத்தைத் தரமுயர்த்துதலின் ஊடாக இலங்கையில் நீடித்து நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை உறுதி செய்தல் மற்றும் காலநிலை மாற்றத்தைத் தணித்தல் Up-scaling Bio-Gas Technology for Sustainable Development and Mitigating Climate Change in Sri Lanka எனும் செயலமர்வு பத்தரமுல்லையிலுள்ள தாமரை நீரேந்து உல்லாச விடுதியில் வியாழக்கிழமை (27.04.2017) இடம்பெற்றது.

அழிவைத் தவிர்த்து நிலைத்து நிற்கக் கூடிய அபிவிருத்தியுடன் முன்னோக்கிச் செல்வதற்கான ஒரே வழி உயிர்வாயுத் தொழினுட்பம் டீழை-புயள வுநஉhழெடழபல வுhந றயல கழசறயசன என்ற தொனிப் பொருளில் தொடர்ந்து உரையாற்றிய பேராசிரியர் வீரசிங்ஹ, தற்போதைக்கு உலகளாவிய ரீதியிலும் நம் நாட்டிலும் ஏற்பட்டிருக்கின்ற காலநிலை மாற்றத்திற்கு மனித நடவடிக்கைகளே காரணமாக அமைந்துள்ளன.

இதனை நாம் மீள் எழுச்சிக்குள்ளாக்குவதாயின் உயிர் வாயத் தொழினுட்பத்திற்கு நாம் மீண்டும் சென்று இயற்கையை அனுசரித்து வாழும் வாழ்க்கை முறையைப் பழகிக் கொள்ள வேண்டும். இயற்கைச் சமநிலையைப் பாதிக்கும் கருமஙகளில் மனிதர்கள் ஈடுபட்டால் அது முழு உலகத்தையுமே அழிவுக்குள்ளாக்கக் கூடியதாக அமைந்து விடும்.

உயிர்வாயுத் தொழினுட்பத்தை பொருளாதார அபிவிருத்திக்கும், வாழ்வாதாரத்திற்கும், சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கும் ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதன் மூலம், நீர், நிலம், வளிமண்டலம், நாம் வாழும் ஒட்டு மொத்த சூழலும் தூய்மையாகப் பேணுவதோடு அடுத்த சந்ததிக்கும் இந்த உலகத்தை பசுமை மாறாது கையளிக்க முடியும்.

எமது பாரம்பரிய கலாச்சாரங்களினூடே இந்த உயிர்வாயுத் தொழினுட்பத்தை இணைத்து அதனை நாளாந்த வாழ்க்கை முறையோடு பழக்கப்படுத்திக் கொண்டால் இயற்கை அழிவுகளைத் தடுத்துக் கொள்வதோடு சிறப்பான சூழலையும் உருவாக்க முடியும். கழிவுகளை முகாமை செய்வதில் இலங்கை ஒரு நெருக்கடி நிலையிலுள்ளது என்பதை இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் புரநிது கொள்ள வேண்டும். இது பற்றி உள்ளுராட்சி நிருவாகம் தீவிரமாகச் சிந்தித்து எதிரே வந்து கொண்டிருக்கின்ற இயற்கை அழிவுகளைத் தடுத்து நிறுத்த திடசங்கற்பம் கொள்ள வேண்டும்.

கழிவுகளை முடிந்த வரையில் மீள்சுழற்சிக்கு உட்படுத்துவதற்கு குடியிருப்பாளர்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட வேண்டும். சேதனப் பசளை மற்றும் உயிர்வாயுத் தொழினுட்பத்தை நோக்கித் திரும்பாத வரையில் திண்மக் கழிவு முகாமைத்துவம் என்பது இலங்கையின் தலைக்கு மேலுள்ள முடிவுறாத அழிவு தரும் பிரச்சினையாக தொடர்ந்து கொண்டிருக்கும். திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்கான போதியளவு இலகு தொழினுட்பங்கள் தற்போது உள்ளன.

ஆயினும், அதுபற்றிய போதிய விழிப்புணர்வும் அக்கறையும் இல்லாததே நாடு இப்பொழுது எதிர்நோக்கும் திண்மக் கழிவு முகாமைத்துவ நெருக்கடிக்குக் காரணமாகும். கிட்டிய காலப்பகுதிக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் திண்மக் கழிவு முகாமைத்துவமும் மீள் சுழற்சியும் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாது விட்டால் குப்பைகளால் ஏற்படும் பேரழிவு நம்மைச் சூழ்ந்து கொள்ளும்.' என்றார். இந்த செயலமர்வில் அரசாங்க கூட்டுத்தாபன திணைக்கள அதிகாரிகளும், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் சர்வதேச தன்னார்வ நிறுவனப் பிரதிநிகளும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -