க.கிஷாந்தன்-
அட்டன் மற்றும் நுவரெலியா பகுதிகளில் அதிகரித்து வரும் வாகன விபத்தை கட்டுப்படுத்த அட்டன் விசேட பொலிஸார் வாகனங்களை சோதனை செய்து அறிவுறுத்தி வருகின்றனர். அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் அட்டன் குடாகம பகுதியில் இவ்வாறு சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தற்போது நுவரெலியாவில் வசந்தகாலம் என்பதால் வெளிமாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்களை நிறுத்தி வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தி அனுப்புகின்றனர். மேலும் சாரதி அனுமதிப்பத்திரம் , வாகன அனுமதி பத்திரம் மற்றும் சாரதி மது அருந்தியுள்ளாரா என பரிசோதனை செய்த பொலிஸார் 16.04.2017 அன்று முதல் முழுமையாக வாகனங்களையும் அதனுடைய தரங்களையும் பற்றிய சோதனையை மேற்கொள்ளுகின்றனர்.
குறிப்பாக, hand brake, steering, gear, brake ஆகியவற்றை பரிசேதனை செய்கின்றனர். அத்தோடு வாகனங்களின் சட்ட விதிகளை மீறுபவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.