கிழக்கு மக்கள் அமையம் என்ற அமைப்பு முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் உதயம்

கிழக்கு மக்கள் அமையம் என்ற அமைப்பு முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்றில் உதயம் பெற்றுள்ளது. இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியின் இறுதிக்கட்டமாக அரசியல் யாப்பு திருத்த நடவடிக்கை அரசினால் முடுக்கி விடப்பட்டுள்ள நிலைமையில் முஸ்லிம் சமூக அரசியல் கடசிகளோ, சிவில் சமூக அமைப்புக்களோ ஒன்று பட்டு எவ்வித முன்மொழிவுகளையும் முவைக்காத நிலையில் அரசியல் தலைவர்கள் என்ற ரீதியில் சிவில் சமூக அமைப்பினை விழிப்புணர்வூட்டி இயங்கு சக்தியாக மாற்ற எடுத்துள்ள முயற்சி காத்திரமான ஒன்றாக வே கருதவேண்டியுள்ளது.

வடகிழக்கினை இணைப்பதன் மூலமே தமிழர்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியும் என்ற வகையில் திரைமறைவில் அரசு செயற்படுவதும் தமிழÊ அரசியல் கட்சிகள் மௌனித்திருப்பதும் பலத்த சந்தேகங்களை முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முஸ்லிம் தரப்பு இன்னும் வில்பத்து விடயத்தில் ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்திக்கொண்டு அரசியல் நடாத்த முற்படுகின்றவேளை அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பில் முஸ்லிம்களின் கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கையாக இதனை கொள்ள முடியும்.

ஆனால் குறித்த அமைப்பின் ஏற்பாட்டு நிகழ்வுகளை அவதானிக்கும்போது சில வினாக்களுக்கும் விடை தேடி நிற்கவேண்டியுள்ளது. கடந்த பல மாதங்களுக்கு முன்னர் தமிழ் மக்கள் பேரவை தீர்வுத்திட்டம் குறித்த தனது முன்மொழிவுகளை சமர்ப்பித்த வேலை, தமிழர் அரசியல் கட்சிகள் வடகிழக்கு இணைப்பிற்கான தம்பக்க நியாயங்களை ஒப்புவித்துக்கொண்டிருந்தபோது மௌனித்திருந்த முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் போன்றோர் இன்னும் சில மாதங்களில் தேர்தல் வருமென அரசு அறிவிப்பு செய்துள்ள நிலையில் மேடையேறியுள்ளமை ஆழ்ந்து அவதானிக்க்கத்தக்கது.

முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் உருவாக்கத்தினை ஏன் கண்டுகொள்ளவில்லை.

கடந்த பெப்ரவரி மாதம் கிழக்கு முஸ்லீம் சிவில் அமைப்புக்களின் சம்மேளனம் என்ற பெயரில் கிழக்கின் முக்கிய சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், சமூக அமைப்புக்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், பள்ளிவாசல் சம்மேளனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட சிவில் அமைப்பொன்று உருவாக்கப்பட்டு கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் யாப்புத்தொடர்பான அழகிய நகல் ஒன்றிற்கான கருத்தொருமைப்பாட்டிற்கு வந்திருந்தது. அதன் அடுத்த கட்டமாக கல்முனையில் இடம்பெற்ற இவ்வமைப்பின் அமர்வில் கிழக்கு முஸ்லிம்களின் வடகிழக்கு இணைப்பு தொடர்பான நிலைப்பாட்டினையும், அரசியல் யாப்பு திருத்தத்தின்போது முஸ்லிம்களது அபிலாசைகளையும் முன்மொழிந்ததுடன் ஊடக அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டிருந்தது. இவ்வமைப்பின் செயற்பாடு கிழக்கின் பல பகுதிகளிலும் முன்னெடுத்துச்செல்லப்பட்டது. 

ஆனால் பலம்மிக்க இவ்வமைப்பின் உருவாக்கம் முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு சவாலாக அமைந்ததுடன் முஸ்லீம் சிவில் அமைப்புக்கள் பலம் பெருமாயின் ஏமாற்று அரசியலில் இருந்து முஸ்லிம் சமூகம் விடுதலை பெற்று மாற்று அரசியல் பாதையினை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்ற அச்சமும் குடிகொண்டிருந்ததனை அதற்கடுத்து நடந்த நிகழ்வுகள் எடுத்துக்காட்டின. முஸ்லிம்கட்சியொன்றின் செயற்பாட்டாளராக இருந்து இவ்வமைப்பில் முக்கிய பதவியினை வகித்த ஒரு மார்க்க அறிஞர் இராஜினாமா செய்துகொண்டார். தொடர்ந்து வடகிழக்கு இணைந்ததாக தீர்வுத்திட்டத்தினை ஏன் முஸ்லிம் சமூகம் சிந்திக்க கூடாது என்ற கோஷத்துடன் இவ்வமைப்பின் செயற்பாட்டாளர்கள், பங்காளர்கள் அனைவருடனும் இரகசிய சந்திப்புக்களை முஸ்லிம்கட்சிகளின் முகவர்கள் கறுப்பாடுகளாக நுழைந்து மேற்கொண்டனர். மாத்திரமல்லாது தமது கட்சி ஆதரவாளர்களை அழைத்து அரசியல் யாப்புத்திருத்தம் தொடர்பில் கட்சியின் நிலைப்பாடு குறித்து தெளிவற்ற வியாக்கியானங்களை செய்தனர். 

சில கட்சிப்பிரதிநிதிகள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்குள் இருந்துகொண்டே கருத்துக்களை முன்வைத்தனர். இத்தகைய செயற்பாடுகளின் தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் கிழக்கு மக்கள் அமையத்தின் உருவாக்கத்தை நோக்க வேண்டியுள்ளது. ஏனெனில் அமைச்சரினால் முன்மொழியப்பட்ட தனது இணைப்பாளரும் இந்நிகழ்வை ஒருங்கிணைக்க செயற்பட்டவருமான சகோதரர் பஹிஜ் கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளனத்தின் பல அமர்வுகளில் பங்கு கொண்டிருந்த நிலையில் இங்கும் மேடையேறி இருப்பது கடசி அரசியல் சிவில் சமூக பலம்பெறுதலை நசுக்கிவிட முயற்சிக்கின்றதோ என எண்ணத்தோன்றுகின்றது. மாத்திரமல்லாமல் இம்மேடையில் பங்கேற்ற அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உற்பட பலரும் கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளனத்தின் அமர்வுகளில் பங்கு கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இத்தகைய சூழ்நிலையில் முற்றிலும் சிவில் சமூக பிரதிநிதிகளைக்கொண்ட அமைப்பினை வலுப்படுத்தாமல் இன்னும் புதிதாக அமைப்புக்களை அரசியல் தலைமைகள் உருவாக்க நினைப்பதனÊ நியாயத்தன்மையினை தெளிவு படுத்த வேண்டிய தேவை முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவிற்கு தார்மிக பொறுப்பாக உள்ளது.

முன்கூட்டியே திட்டமிட்ட அமைப்பு முறைமை

நடந்து முடிந்த கிழக்கு மக்கள் அமையத்தின் கூட்டத்தினை உன்னிப்பாக அவதானிக்கினÊற போது ஜனநாயக ரீதியிலன்றி குறிப்பிட்ட ஒரு குழுமத்தின் ஆதிக்கத்துக்குள் இவ்வமைப்பு வழிநடாத்தப்படவேண்டும் என்பதைப்போல் நிகழ்வுகள் நடந்தேறின. நாட்டாமை அரசியல் கிராமங்களில் பள்ளிவாசல் தெரிவுகளில் சில ஆதிக்க பிரபுக்கள் நான் தலைவராக இருக்க்கின்றேன் அவர் செயலாளராக இருக்கட்டும் இவர் பொருள்ளாளராக இருக்கட்டும் இன்னும் இரு உறுப்பினர்களை நீங்கள் தெரிவு செய்யுங்கள் போன்றதாக ஏற்பாட்டாளர்களே அமைப்பின் பதவிவழியினரையும் உறுப்பினர்களையும் தெரிவு செய்தமையை அவதானிக்க முடிந்தது. குறைந்த படÊசம் பங்குபற்றுனர்களிடையே இது தொடர்பில் கருத்து பெறமுடியாத சர்வாதிகார சிவில் அமைப்பொன்று உருப்பெறமுனைவதை உணரமுடிகின்றது.

புத்திஜீவிகளின் முதலÊ அமைப்பு.


குறித்த அமர்வில் புத்திஜீவிகள், சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள், உலமா சபையினர் அனைவரும் கலந்துகொண்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அடிக்கடி குறிப்பிட்டுக்கொண்டபோதும் குறித்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் பெரும்பாலானவர்கள் கலந்து கொல்லாமை குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. இது ஒருபுறம் இருக்க கிழக்கு முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களின் சம்மேளனம்; தோற்றம் பெற்றபோது பல்வேறு தரப்பும் அதில் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்க விடயம்.

 ஆனால் அதனை அரசியல் தலைவர்கள் கண்டுகொள்ளாமை சிவில் சமூகத்துக்கும் அரசியல் தலைமைகளுக்கு இடையில் உள்ள இடைவெளியினை புடம்போடுகின்றது. அவுஸ்திரேலியாவில் இருந்து பேராசிரியர் அமீரலி அவர்களது வாழ்த்துச்செய்தி காணொளியாக ஒளிபரப்பப்பட்டது. இலஙÊகை முஸ்லிம்கள் தொடர்பில் நாடுகடந்து வாழ்கின்ற புத்திஜீவிகள் வாய்திறக்க நினைப்பது ஆரோக்கியமான ஒன்றே. இருந்தபோதும் வானத்தில் இருந்து விழுந்தவர்கள் போன்று 'இலங்கை முஸ்லீம் சமூகத்தில் முதன்முறையாக இத்தகைய ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன் எதிர்காலத்தில் எனது பங்களிப்பினையும் மேற்கொள்வேன் என கருத்து தெரிவிக்க முனைந்ததன் பின்னணி குறித்து சிந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு முஸ்லீம் சமூகம் தள்ளப்பட்டுள்ளது. கிழக்கு கிழக்காகவே இருக்கவேண்டும் என கிழக்கு முஸ்லீம் சிவில் சமூக அமைப்புக்களின் சம்மேளனம்; ஊடக அறிக்கை முதல் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னரும் சாட்ச்சியம் அளித்தபோது இத்தகைய புத்திஜீவிகள் மௌனித்திருந்ததன் நோக்கம் ஐயத்தை ஏற்படுத்துகின்றது.

ஏற்பாட்டாளர்கள், பங்கு பற்றுனர்களிடையே மாறுபட்ட கருத்து

குறித்த நிகழ்வில் கிழக்கு வடக்குடன் இணைக்க முடியாது என்ற கருத்தில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா அவர்களின் பேச்சு அமைந்திருந்தவேளை கலந்து கொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்கள் இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கான தீர்வு எவ்வாறு அமைய வேண்டும் என்றும் பேசப்படவேண்டும் என யதார்த்தமான கருத்தினையும் முன்வைத்ததனை காணமுடிகின்றது.

இவ்வாறு பல்வேறு கோணங்களில் அலசி ஆராயப்படவேண்டிய ஒரு நிகழ்வாக கிழக்கு மக்கள் அமையத்தின் நிகழ்வு காணப்படுகின்றது. இத்தகைய அமைப்புக்களின் உருவாக்கத்திற்கு கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளனம் போன்ற அமைப்புக்களின் தொய்வு நிலைகளும் காரணமாக அமைந்துள்ளமையை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். ஏனெனில் இவ்வமைப்புக்கள் முஸ்லிம் சமூகத்தினுள் ஆதிக்க சக்திகளான அரசியல் பிரதிநிதிகளை கூடுதலாக உள்வாங்க தயங்கியமையும், குறைந்தபட்சம் அவர்களுடன் தொடர்ந்தேச்சியான கலந்துரையாடல்களை மேற்கொள்ள தவறியமையையும் குறிப்பிட்டுக்கூறமுடியும். 

மாத்திரமல்லாமல் கிழக்கில் வாழும் ஏனைய சமூகங்களுடன் திறந்த கலந்துரையாடல்களை வடகிழக்கு இணைப்புத்தொடர்பில் மேற்கொள்ளத்தவறியமையும் குறிப்பிட்டுக்கூற வேண்டிய அம்சமே. கிழக்கு வடக்குடன் இணைக்க கூடாது என்ற வாதத்தினை தமிழர் தரப்பும் மாற்றுக்கருத்தாக கொண்டுள்ளமைக்கான ஆதாரமாக சகோதரர் ஸ்டார்லினின் அண்மையில் வெளியிட்டு வைக்கப்பட்ட நூல் விபரிக்கின்றது. கிழக்கின் பெரும்பான்மை சிங்கள சமூகமும் இத்தகைய நிலைப்பாட்டில் அமைந்துள்ளமை யதார்த்தமாகும்.

எது எவ்வாறிருந்தபோதும் அரசியல் தீர்வு குறித்து, வடகிழக்கு இணைப்பு குறித்து அரசியல் தலைவர்கள் சிலர் முன்னெடுப்புக்களை முதன் முதலில் மேற்கொள்வது வரவேற்கத்தக்க அம்சமாகும். என்றபோதும் அரசியலின் தீவிர செயற்பாட்டாளர்களாகவும், கட்சிகளின் முக்கிய பதவிநிலைகளை அலங்கரிப்பவர்களாகவும் இருந்துகொண்டு சிவில் சமூக கட்டமைப்பினை முன்னெடுத்து செல்ல முனைவது அரசியலில் மாற்றுக்கருத்துக்கொண்டவர்களை இவ்வமைப்பில் உள்ளீர்க்க சாதகமாக அமையாது.

 எனவே சுயாதீன சிவில் சமூக பிரதிநிதிகளிடம் இவ்வாறான அமைப்புக்கள் கையளிக்கப்பட அரசியல் தலைமைகள் ஒப்புரவாகவும், பக்க பலமாகவும் இருந்து செயற்படும் பட்சத்தில் பலமான சிவில் சமூக அமைப்பொன்றினை நிறுவ முடியும் என்பதுதான் முஸ்லிம்களது கோரிக்கைக்கு சாதகமான முடிவினையும் பெற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -