ஏ.எம்.கீத் திருகோணமலை-
திருகோணமலையில் கிழக்கு மாகாண சபைக்கு முன்னால் இன்று வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.கிழக்கு மாகாண சபைக்கான மாதாந்த கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் மாகாண சபை வாயிற்கதவுகளின் முன்னாள் அமர்ந்தவாறு தமது ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமது சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் அலற்சியப்படுத்தபட்டதாகவும் தமது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதினால் தாம் இப்போராட்டத்தில் ஈடுபடுவதாக பட்டதாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அங்கு வந்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அமைதியான முறையில் ஆர்பாட்டத்தில் ஈடுபடுமாறு கூறினர் அதை ஏற்றுக்கொள்ளாத ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட வேலையில்லா பட்டதாரிகள் பொலிஸாருடன் வாக்கவாதத்தில் ஈடுபட்டதுடன் சிறுகைகளப்பும் நிலையும் ஏற்பட்டது. தொடர்ந்து நிதிமன்ற உத்தரவை கையில் வாங்கிய ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பௌத்த மதகுரு ஒருவர் நீதிமன்ற உத்தரவை கிழித்தெரிந்ததுடன் பொலிஸாருக்கு முன்னாலே காலில் போட்டு மிதித்து தொடர் கோஷம் எலுப்பினர்.