மீதொடமுல்ல குப்பை கொழும்பு வாழ் மக்களுடையது மட்டுமல்ல. மாறாக அது முழு நாட்டு மக்களுடையது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். மீதொடமுல்ல குப்பை சமுகாமைத்துவம் தொடர்பில் இற்றைக்கு 2 தசாப்தங்களுக்கு முன்னர் யோசனைகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு பல இடங்களிலுமுள்ள மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனாலேயே இந்த திட்டம் கைவிடப்பட்டது.
“கொழும்பு குப்பை எமக்கு வேண்டாம்” (கொழம்ப குனு அபிட எபா) என மக்கள் கோஷம் எழுப்பத் தொடங்கினர். உண்மையில் இங்கு சேருகின்ற குப்பை கொழும்பு மக்களுக்கு மட்டும் உரியதல்ல.
கொழும்பு நகரில் வசிப்பவர்களின் எண்ணிக்கை சுமார் ஆறரை லட்சம் பேர். ஒவ்வொரு நாளும் வெளியிடங்களிலிருந்து கொழும்புக்கு வருபவர்களின் எண்ணிக்கை சுமார் 10 லட்சம். இவ்வாறு வரும் பத்து லட்சம் பேரும் பயன்படுத்தும் குப்பைகளும் இதில் அடங்குகின்றன.
எனவே, யாரும் இதனை கொழும்பு மக்களின் குப்பையாக கருத முடியாது எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.