ஏ.ஆர்.ஏ.ரஹீம்-
இன்று மரிச்சிக்கட்டி ஆர்ப்பாட்ட நிகழ்விற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாட் பதியுதீன் அசாத் சாலி றிப்கான் பதியுதீன் ஜயதிலக்க ஆகியோர் வருகைதந்து நிகழ்வில் பங்கேற்றனர்.
இதன்போது உரையாற்றிய ஆசாத் சாலி அவர்கள்: ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியினை பற்றியும் அக் கட்சியின் இன்றய நிலை பற்றியும் அக் கட்சியில் உள்ள அசமந்தப்போக்குடைய அரசியல் வாதிகளின் செயற்பாடுகள் பற்றியும் உரையாற்றினார் இதன்போது அமைச்சர் ரஊப் ஹக்கீம் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் அவர்கள் பற்றியும் பேசினார்.
உண்மையை மக்கள் முன் தெரிவித்த கோபத்தினால் அமைச்சர் ரிஷாட் பதியுதீனையும் அசாத் சாலியையும் தாக்குவதற்காக சிலாவத்துறை முச்சந்தியில் ஒரு படையினரை சேர்த்து வருகின்றவர்களை கற்கள் மற்றும் பெட்ரோல் வெடிகுண்டு போன்றவற்றினால் தாக்குவதற்கு தயாராக இருந்த நிலையில் அமைச்சர் போலீசாருடன் வருகை தந்தமையினால் சற்று பதுங்கி தன் சாதியை இடைநிறுத்தியுள்ளனர்.
இந்த விடயத்தில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று அமைச்சரை அழிப்பதற்காக இன்று சிங்கள இனவாதிகளை விடவும் அதிகம் சதி வேலை செய்து வருவது ஹுனைஸ் பாருக் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று அதுமட்டுமல்லாது ஒற்றுமையாக சகோதரத்துவமாக வாழும் மக்களிடையே முசலி என்ற ஒரு பிரதேச வாத போக்கினை பரப்பி வருகின்றார். அத்தோடு அமைச்சருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அனைத்து இடத்திலும் புறம் பேசி திரிவதும் இவரது நாளாந்த செயற்பாடாக இருக்கின்றது. இவ்வாறான இவருடைய சதிகளுக்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இவருடைய அடாவடித்தனம் பொலிஸாரினால் அடக்கப்படவேண்டும்.