ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவிற்கான பிரதான செயற்பாட்டுக் குழு அதிரடி இராஜினாமா.





ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

மட்/ மம/ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யின் நூற்றாண்டு விழா பிரதான செயற்பாட்டுக் குழுவானது கீழ்படி கடிதத்தை நேற்று 05.04.2017ம் திகதி இரவு 09.00 மணியளவில் பாடசாலையில் இடம்பெற்ற கூட்டத்தின்போது சமா்ப்பித்து தங்களது இராஜினாமாவை ஒட்டுமொத்தமாக அறிவித்திருந்தனா். அதற்கான காரணங்கள் கீழுள்ள கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாடசாலை நிருவாகம் இராஜினாமாவை ஏற்றுக் கொள்ள மறுத்தபோதும் தங்கள் நியாயத்தை நிரூபிக்க ஒற்றுமையுடன் நின்ற பிரதான செயற்குழு உறுப்பினா்கள் இராஜினாமாக் கடிதத்தை இறுதியில் சமா்ப்பித்துவிட்டே வந்தமை குறிப்பிடத்தக்கது.

04.04.2017

அதிபர்,
தலைவர் - பழைய மாணவர் சங்கம்
மற்றும் நூற்றாண்டு விழா பிரதான செயற்பாட்டுக் குழு
மட்/ மம/ ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை),
ஓட்டமாவடி.

மட்/ மம/ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யின் நூற்றாண்டு விழா பிரதான செயற்பாட்டுக் குழுவிலிருந்து விலகிக் கொள்ளுதல்.
மேற்படி விடயம் தொடர்பாக தங்களுக்கு அறியத் தருவதாவது: எமது பாடசாலையின் நூற்றாண்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக பழைய மாணவர் சங்கத்தின் பங்களிப்புடன் நூற்றாண்டு விழாவுக்கான பிரதான செயற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்ததனை தாங்கள் அறிவீர்கள்.

இந்நூற்றாண்டு விழாவுக்கான திட்டமிடல், நிதி சேகரிப்பு, நிகழ்வுகள் ஏற்பாடு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பிரதான செயற்பாட்டுக் குழு முழுமையாக ஈடுபட்டு வந்திருந்ததோடு விழா தொடர்பான பல காத்திரமான தொடர் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வந்திருந்தனர். அந்தவகையில் இந்நூற்றாண்டு விழாவினை மிகச் சிறப்பாக நடத்துவதற்கு பிரதான பங்களிப்பாளர்களாக இச்செயற்பாட்டுக் குழு செயற்பட்டு வந்தது.
எனினும் அண்மைக் கால நடவடிக்கைகள் பிரதான செயற்பாட்டுக் குழுவைப் புறக்கணிப்பதாகவும் மலினப்படுத்தக் கூடியதாகவும் உள்ளது. குறிப்பாக..

1. நிதி முறைகேடான வகையில் பயன்படுத்தப்படுகின்றமை : பழைய மாணவர் சங்கத்திற்குத் தெரியாமல் நிதி சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது.
குறிப்பாக, அனைத்து செலவுகளையும் விலைமனுக் கோரல் நடைமுறையில் செயற்படுத்துமாறு பிரதான செயற்குழு வலியுறுத்தியுள்ள நிலையில் செலவுகள் தன்னிச்சையாக மேற்கொள்ளப்படுகின்றது.

அ) பழைய மாணவர் சங்கக் கொழும்புக் கிளையினால் ரிசேட் அடிக்கப்பட்ட விடயம்.

ஆ) பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டிகளின் போது தொப்பி மற்றும் “மீண்டும் பாடசாலைக்குத் திரும்புதல்” நிகழ்வின்போது தேநீர் மக் அதிக விலைக்கு அடிக்கப்பட்டுள்ளமை.

இ) கிரிக்கட் போட்டிக்கான நிதி பழைய மாணவர் சங்கக் கணக்கில் வராமல் தன்னிச்சையாகப் பெற்று செலவு செய்யப்பட்டமை.

ஈ) இறுதி நிகழ்வுகளை நடத்தவிருக்கும் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கைச்சாத்திடாமல் பாரிய நிதியை வழங்கியமை.

2. பாடசாலையின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் தனி அரசியல் மயப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலாக மாற்றியமைக்கப்பட்டுள்ளமை.

3. சாதனையாளர்கள் விருதுக்கு பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தாதவர்களை உள்வாங்கியுள்ளமை. இது தொடர்பாக பிரதான செயற்பாட்டுக் குழுவுடன் கலந்துரையாடப்படவில்லை என்பதோடு பிரதான செயற்பாட்டுக் குழுவுக்கு பொறுப்பளிக்கப்பட்டு இக்குழுவினால் தயாரிக்கப்பட்ட பட்டியலைக் கருத்திற் கொள்ளாமை.

4. இறுதி நிகழ்வுகளின் போது மார்க்கத்திற்குப் புறம்பான நிகழ்ச்சிகள் நடாத்த ஆலோசிக்கப்பட்டபோது அதனைத் தவிர்க்குமாறு பல தடவைகள் எம்மால் முன்னெடுக்கப்பட்ட ஆலோசனைகளைக் கருத்திற் கொள்ளாமை. குறிப்பாக இசைக் கச்சேரி நடத்தவுள்ளமை.
இவ்வாறான செயற்பாடுகளினால் இந்நிகழ்வில் பிரதான பங்களிப்புச் செலுத்திவரும் பிரதான செயற்பாட்டுக் குழுவான எம்மைப் பற்றி; சமூகத்தில் பிழையான பார்வை உருவாகும் என நாங்கள் கருதுகிறோம். இது தனிப்பட்ட வகையில் இச்சமூகத்தில் செல்வாக்குச் செலுத்தும் எமது சுய கௌரவத்;தைப் பாதிக்கும் என்பதால் அதனை பாதுகாக்கும் நோக்கில் இந்நூற்றாண்டு விழாவின் பிரதான செயற்பாட்டுக் குழுவிலிருந்து விலகிக் கொள்ளத் தீர்மானித்துள்ளோம். எனினும்ää நாம் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் உறுப்புரிமையில் இருந்து தொடர்ந்தும் பங்களிப்புச் செய்வோம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.


இந்நிகழ்வுக்கான நிதி சேகரிப்பில் எமது பிரதான செயற்பாட்டுக் குழு முக்கிய பங்காற்றியுள்ளமையினால் நிதிப் பயன்பாடு பற்றி பொதுமக்கள் மத்தியில் எம்மைப் பற்றி எதுவித தப்பபிப்பராயங்களும் ஏற்பாடாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு இதுபற்றி நாங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்துவோம் என்பதனையும் தங்களுக்குக் கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.

எமது பாடசாலையின் இந்நூற்றாண்டு விழா நிகழ்வு சிறப்பாக நடைபெற இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

நூற்றாண்டு விழா பிரதான செயற்பாட்டுக் குழு

1. S.A.M. Riyas (Asst. Director of Planning)
2. M.M. Razick (Attorney-at-Law, LLB)
3. Dr. B.M. Firnas (MBBS), Director Qimmah Hospital pvt ltd
4. K.L.M. Irshad (Manager – BOC)
5. M.H.M. Fairoos (Director –Aramjee Group)
6. M.A.C. Niyasdeen (MD – Akeel Tyre House & President- Trade Union, Oddamavadi)
7. A.L.M. Rizvi (MD – Stylish Brothers Pvt Ltd & Secretary of Trade Union, Oddamavadi)
8. M.J.M. Anwer Nawsad (M.A (PMIR), PGDM, Ex-Coordinator for National Paper Corporation, VCH
9. J.M. Imthiyas (Programme Manager, Muslim Aid)
10. A.B.M. Rizwin (Director – United Aid for Humanity)
11. A.L. Haniffa (Youth Service Officer)
12. H.M.M. Idrees (MD, Digital Way)
13. A.L. Muhajireen, Teacher (Ex. PS member – KPW)
14. H.M. Niyas (Manager, Diary Co-op)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -