''அமெரிக்காவைக் கதறச் செய்யுங்கள்!'' - ரஷ்யாவிடம் ஈரான் ஜனாதிபதி வேண்டுகோள்

எஸ்.ஹமீத் -
''சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிராகக் குண்டு வீசிய அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுத்துக் கதறச்செய்யுங்கள். தமது நடவடிக்கைக்காக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் அமெரிக்காவும் வருந்தக் கூடிய நிலையை ஏற்படுத்துங்கள்.'' மேற்கண்டவாறு ரஷ்யப் பிரதமர் விளாதிமிர் புட்டினிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி.

கடந்த சில தினங்களுக்கு முன்னம் சிரியாவில் இரசாயனக் குண்டுத் தாக்குதல் நடந்ததும் இதில் பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்களென 75 ற்கு மேற்பட்டோர் உயிரிழந்ததும், இத்தாக்குதலை சிறிய ஜனாதிபதி அசாத்தின் படைகளே நிகழ்த்தின என அமெரிக்கா, தெரிவித்ததும் அதற்குப் பதிலடியாக சிரிய இராணுவத் தளம் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தியதும் நாமறிந்ததே. இந்நிலையில் அமெரிக்காவுக்கெதிராக ரஷ்யா பலத்த கண்டனத்தைத் தெரிவித்திருந்தது. ரஷ்யாவுக்கு ஆதரவாக ஈரானும் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தது.

இது இப்படியிருக்க, நேற்று ஈரானிய ஜனாதிபதியான ஹசன் ரூஹானி ரஷ்யாவுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கிறார். அந்த வேண்டுகோளிலேயே ''சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிராகக் குண்டு வீசிய அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுத்துக் கதறச்செய்யுங்கள். தமது நடவடிக்கைக்காக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் அமெரிக்காவும் வருந்தக் கூடிய நிலையை ஏற்படுத்துங்கள்.'' என்று மிகப் காட்டமாகக் கூறியிருக்கிறார். மேலும், ''சர்வதேசத் சட்டங்களையும் கடப்பாடுகளையும் அமெரிக்கா என்றுமே மதித்து நடப்பதில்லை. முட்டாள்தனமாக அவர்கள் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறார்கள். பொறுப்பற்ற விதத்தில் தானே உலகத்தின் தலைவன் என அமெரிக்கா தன்னை எண்ணிக் கொண்டிருக்கிறது.'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -