அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை- வெறுகல் பிரதேச செயலாளரை தாக்க முற்பட்டதுடன் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் நான்கு பேரில் ஒருவரை இன்று (09) கைது செய்துள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஈச்சிலம்பற்று- பூநகர் பகுதியைச்சேர்ந்த குணநாதன் ரமேஸ் (29வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வெறுகல் பிரதேச செயலகத்திலுள்ள வடிகான்களை டெங்கு பரவாமல் தடுக்கும் நோக்கில் சுத்தப்படுத்திக்கொண்டிருக்கும் வேளை நாக்கு பேர் தன்னை சந்திப்பதற்காக வந்த போது தற்போது சந்திக்க முடியாது என சக ஊழியர்களினால் கூறப்பட்டதையடுத்து கோபத்தில் வந்த நான்கு பேர் தன்னை தாக்கிதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நான்கு பேரில் ஒருவர் வெறுகல் பிரதேச செயலாளர் எம்.தயாபரனை தாக்கியதாக முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது. இதேவேளை அரச காணியொன்றில் கட்டிடம் கட்டப்பட்ட நிலையில் அதனை நிறுத்துமாறு கடிதம் அனுப்பப்பட்டதையடுத்தே தன்னை தாக்கியதாகவும் வெறுகல் பிரதேச செயலாளர் எஸ்.தயாபரன் தெரிவித்தார்.
இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பிரதேச செயலாளரை தாக்க முற்பட்ட நான்கு பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றைய மூவரும் தலைமறைவாகியுள்ளதாகவும் கைது செய்வதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர்.