இவ்வருட புத்தாண்டில் சதொசவுக்கு அதிக வருமானம் - அமைச்சர் ரிஷாத்

வ்வருடம் சித்திரைப் புத்தாண்டில் சதொச விற்பனை நிலையங்கள் கடந்த கால புத்தாண்டுக் காலத்தை விடவும் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதின் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நிவாரண விலையில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான அத்தியவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என்று அமைச்சர் ரிஷாத் பதியுதின் கூறியுள்ளார்.

மேலும் இப்புத்தாண்டு காலத்தில் பொருட்கள் மீது அரசாங்கம் விதித்திருந்த கட்டுப்பாட்டு விலைகள் முடியுமான வரையில் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -