செஸ் போட்டியில் சர்வதேச அரங்கில் இலங்கை முஸ்லிம் மாணவி சாதனை

றியாத் ஏ. மஜீத்-
ர்வதேச செஸ் போட்டியில் கண்டி மகளிர் கல்லூரி மாணவி செய்னப் ஷமி சம்பியன் பட்டத்தைபெற்று எமது நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைவதோடு இம்மாணவிக்குவாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனதுவாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாழ்த்துச் செய்தியில் பிரதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

உலக செஸ் சம்மேளனத்தினால் இத்தாலியில் இம்மாதம் 1ம் திகதி தொடக்கம் 9ம் திகதி வரைநடைபெற்ற சர்வN;தச செஸ் போட்டியில் 50 நாடுகளிளிலிருந்து உலக தரவரிசையிலுள்ள 2000செஸ் போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர். இப்பிரிவில் இம்மாணவி இலங்கை சார்பாகபங்குபற்றி இந்தச் சாதனையை நிகழ்த்தியிருப்பதானது சர்வதேச அரங்கில் எமது நாட்டுக்குநன்மதிப்பையும் கௌரவத்தையும் கொடுத்துள்ளது.

இந்த சாதனை மூலம் இலங்கை மகளிர் செஸ் வீராங்கனைகள் தரவரிசையில் சிறுபான்மைஇனத்தைச் சேர்ந்த சகோதரி செய்னப் ஷமி முதல் இடத்தைப் பெற்று முன்னணியில்திகழ்வதானது நாட்டின் சிறுபான்மை இனத்தை சேர்ந்த விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்என்ற ரீதியில் பெருமையடைகின்றேன்.

இம்மாணவி இச்சாதனையை புரிவதற்கு வழிகோளிய பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்பயிற்றுவிப்பாளர் குறிப்பாக பெற்றோர் உள்ளிட்ட அனைவரையும் பாரட்டுகின்றேன்.

எதிர்காலத்தில் இம்மாணவி சர்வதேச போட்டிகளில் பங்குபற்றி பல சாதனைகள் படைக்கஎன்னாலான சகல உதவிகளையும் வசதி வாய்ப்புக்களையும் செய்துகொடுக்க எண்ணியுள்ளேன்எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -