சுட்டிக் குழந்தை பேக்கரி வாகனத்தில் மிதிபட்டு பரிதாப மரணம் - சற்று முன் நிந்தவூரில் சம்பவம்



ஜெலீல் நிந்தவூர்-

இன்று மாலை நிந்தவூர் பகுதியில் பேக்கரி பொருட்களை விற்பனை செய்து வரும் வாகனம் ஒன்றில் மிதிபட்டு 1- 1/2 வயது ஆண் குழந்தை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

நிந்தவூர் 6ம்,பிரிவைச் சேர்ந்த கிண்ணியாகாரரின் பேரனான ஒன்னரை வயதுக் குழந்தை "அஜ்மல் ஹம்தான் எனும் குழந்தையே பேக்கரி வண்டியில் மிதிபட்டு நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற வேளையில் இடையில் உயிர் பிரிந்துள்ளது.

குழந்தையின் தாய் பேக்கரி வண்டியில் சாமான்கள் வாங்கிக்கொண்டிருந்த போது குழந்தை வண்டிக்கு முன் நின்று கொண்டிருந்ததை கவனங்கொள்ளாத பேக்கரி சாரதி வண்டியை முன் நகர்த்திய போதே இப் பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -