பிறவ்ஸ்-
சம்மாந்துறை பிரதேச மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் நில அளவைத் திணைக்களத்தின் சம்மாந்துறை பிராந்திய அலுவலகம் இன்று (11) செவ்வாய்க்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரின் முயற்சியினால் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டிடத்தின் திறப்புவிழாவில், பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், மாகாண சபை உறுப்பினர்களான ஐ.எல்.எம்.மாஹிர், ஏ.எல். தவம், ஆரிப் சம்சுதீன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.