அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டாரக் கிளைகளை கல்முனைக்குடியில் ஸ்தாபிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் கல்முனை ஆஸாத் பிளாஸா மண்டபத்தில் இடம்பெற்றது.
கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சரின் பாராளுமன்ற விவகாரச் செயலாளருமான ஏ.ஆர்.எம். ஜிப்ரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கல்முனைக் குடியில் 16 கிளைகளை அமைப்பதற்குரிய குழுக்கள் தெரிவு செய்யப்பட்டன. இவ்வேளையில் 250 பேர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் புதிதாக அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டனர்.
இவ்வைபவத்தில் கட்சியின் தவிசாளரும் கிராமியப் பொருளாதார பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி, கட்சியின் செயலாளர் நாயகம் எஸ். சுபைதீன், கல்முனை மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர்களான ஏ.சீ.எம். முபீத், பெஸ்டர் றியாஸ் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.