குறித்த இருவரும் காதலித்து வந்துள்ளதாகவும் அவர்கள் களனி - பெஹலியகொடை பிரதேச பாடசாலையொன்றில் உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவத்துடன் தொடர்புடைய 18 வயது நிரம்பிய மாணவன் குறித்த மாணவியின் நிர்வாண புகைப்படமொன்றை வட்ஸ்அப்பில் அனுப்புமாறு பல தடவைகள் மாணவன் கேட்டுள்ளான்.
ஆரம்பமுதல் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்த குறித்த மாணவி, காதலன் கோபித்துக் கொண்டதால் பின்பு விருப்பமில்லாமல் அவரின் நிர்வாண புகைப்படத்தை வட்ஸ்அப் மூலம் குறித்த மாணவனுக்கு அனுப்பி வைத்துள்ளதாக பொலிஸார் நடத்திய விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
பின்னர் , புகைப்படத்தை பெற்றுக்கொண்ட அந்த மாணவன் , அதை இணையத்தில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் தான் கேட்கும் பணத்தை தருமாறு கோரியுள்ளார்.
இதன் காரணமாக செய்வதென்ன என்று அறியாத குறித்த மாணவி அவரின் வீட்டில் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த பணத்தினை பெற்றோருக்கு தெரியாமல் திருடி , காதலனாகிய குறித்த மாணவனுக்கு கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது.
சுமார் ஒரு இலட்சம் ரூபா வரை குறித்த மாணவியிடம் இருந்து அந்த மாணவர் அவளின் நிர்வாண புகைப்படத்தினை வைத்து பணம் பறித்துள்ளதாக பொலிஸ் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து சமீபத்தில் அந்த மாணவர் மேலும் 20 ஆயிரம் ரூபா கேட்டுள்ளார். குறித்த மாணவியிடம் பணம் இல்லாததால் அவரின் உறவினரொருவரிடம் அவசர தேவையிற்காக தனக்கு 20 ஆயிரம் ரூபா தேவையென கூறி குறித்த மாணவி பணம் கேட்டுள்ளார்.
இதன் போது , சந்தேகத்தின் பேரில் குறித்த உறவினர் இது தொடர்பில் தொடர்ந்து குறித்த மாணவியிடம் விசாரித்ததில் மாணவி நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் , இது தொடர்பில் குறித்த மாணவியின் பெற்றோருக்கு உறவினர் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து குறித்த மாணவியின் பெற்றோர் பெஹலியகொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் , 18 வயதுடைய அந்த மாணவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.(வீ)
இது அனைத்து மாணவிகளுக்கும் குறிப்பாக அனைத்து பெண்களுக்கும் படிப்பினையாக இருக்கட்டும். புத்தியைப் பாவித்து இருக்கும் புத்தியுடன் நடந்து கொள்ள இது போதுமானது.