அப்துல்சலாம் யாசீம்-
கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமும் -சிறுவர் அபிவிருத்தி நிதியமும் இணைந்து நடாத்தும் விஷேட தேவையுடையோர்களுக்கான இலவச வைத்திய முகாம் இன்று (24) நிலாவௌி கோபாலபுரம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தில் விஷேட தேவையுடையவர்களின் மருத்துவ ரீதியிலான பிரச்சினைகளை சரியாக கண்டறிவதற்கு உதவுவதுடன் சரியான சுகாதார சேவைகளைப்பெற வழிவகுத்தலுமே இதன் நோக்கமாகும் என சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் திருகோணமலை மாவட்ட முகாமையாளர் வீ.வினோபவன் தெரிவித்தார்.
ஜரோப்பிய ஒன்றியத்தின் சிவில் சமூக அமைப்புகளுக்கான Together திட்டத்தின் ஊடாக இச்செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
திருகோணமலை மாவட்டத்தில் கோமரங்கடவெல.மொறவெவ பிரதேசங்களில் ஏற்கனவே இடம் பெற்றதாகவும் அதில் விஷேட தேவையுடையோர் 400ற்கும் மேற்பட்டவர்கள் இணங்காணப்பட்டுள்ளதாகவும் முகாமையாளர் வீ.வினோபவன் தெரிவித்தார்.
இதில் கண், மூக்கு காது மற்றும் இயன் மருத்துவம் சிறுவர் முதியவர்களுக்கான பரிசோதனைகள் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.