ஹஸ்பர் ஏ ஹலீம்-
தமிழ் மக்கள் பேரவையின் உள்ளக கலந்துரையாடல் ஒன்று திருகோணமலை உவர்மலையில் உள்ள விடுதி ஒன்றில் இடம் இன்று 23ம்திகதி பெற்றது.அந்தக் கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் ஆகியோர் உட்பட பலர்கலந்து கொண்டனர்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பேரவையானது ஒரு மக்கள் இயக்கம் அதன் அடிப்படையில் மக்களுடைய எதிர்பார்ப்பு தற்போது கூடிக்கொண்டு போகிறது.தங்களுடைய பங்களிப்பு பெருமளவில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கின்றது.இந்த மக்களை சேர்த்து நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பான உள்ளக கலந்துரையாடல் ஒன்றே இன்று இடம் பெற்றது.நடைமுறை சிக்கல்கள் சில இருக்கின்றது.இவை தொடர்பாக பேசி பேரவைக்கு ஒத்துழைப்பு நல்குவதாகவும் மக்கள் அணி ஒன்றை திரட்டுவதாகவும் அந்த அணி எம்முடன் சேர்ந்து வேலை செய்யக் கூடிய ஒரு கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாகவே நாம் பேசுp வருகின்றோம்.
வடகிழக்கில் போராடி வருகின்ற காணாமல் போனானோர் தொடர்பான பிரச்சினை இலகுவில் தீரக்கக் கூடிய பிரச்சினை இல்லை இவர்களுடைய சொந்த பந்தம் உறவினர்களை இராணுவத்தின் முன்னிலையில் கையளித்திருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள இராணுவம் மறுக்கின்றது.இந்த நிலையிலேயே போதுமான விசாரனை நடாத்தபட வேண்டியுள்ளது..அதனை அரசாங்கம் முன்னெடுத்ததாகவும் தெரியவில்லை இதற்காகத்தான் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஒன்றை அமைப்பது தொடர்பாக சட்டமூலம் ஒன்றை நிறைவேற்றினார்கள் அதனை நடைமுறைப்படுத்தவும் அரசாங்கத்திற்கு முடியவில்லை.
தற்போது இரண்டு ஆண்டு கால அவகாசம் கிடைத்த நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.எனினும் இது சம்மந்தமான என்ன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவார்கள் என்று நாம் ஆராய வேண்டியுள்ளது.இது தொடர்பாக நீண்ட கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளேன் அவை தொடர்பாக ஜனாதிபதி என்னுடன் பேசுவதாக சொல்லியுள்ளார்.
எனினும் உரியவர்களுடன் பேசி எங்கெங்கு எவர் எவர் இருக்கிறார்கள் என்பதை நாம் முதலில் அறிய வேண்டும்.எனவே தான் காணாமல் போனோரின் சில பத்திரிகையில் வந்த படங்களையும் எடுத்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளென். திருகோணமலை மாவட்டமானது எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தரை பிரதிநிதித்துவப் படுத்தும் மாவட்டம் மேலும் கிழக்கு மாகாணசபை அமைச்சரான தண்டாயுதபாணி ஆகியோர் உள்ள மாவட்டம் அவ்வாறிருக்க ஏன் அவர்களை இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வில்லையாஃஎன ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்க பதிலிக்கயியேயே கிழ் கண்டவாறு தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பேரவை ஒரு கட்சியாக பரிணமிக்கப்போகிறத என்ற வித்தியாசமான கண்னோட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பினரக்கு இருந்த வந்தது இந்த கருத்துக்கு நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை ஆயினும் சம்மந்தமில்லாத ஏனையொரையும் அங்கத்தவர்கள் அல்லாதேரையும் இங்கு அழைக்க வேண்டிய அவசியம் இல்லை என பதிலளித்தார்.