காணியை மீட்கும் கேப்பாபிலவு போராட்டத்துக்கு முழு ஆதரவு - அமைச்சர் றிஷாட்

ஊடக பிரிவு-
கேப்பாபிலவு மக்களின் காணி மீட்புப்போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இந்தகாணியை மக்களுடன் பெற்றுக்கொடுப்பதற்கான உச்ச கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் றிஷாட் உறுதியளித்தார். இன்று காலை(11-04-2017) தேசிய ஜக்கிய முன்னனியின் தலைவர் அசாதக சாலி, மற்றும் சட்டத்தரணி என்.எம் சஹீட் ஆகியோருடன் அந்த இடத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களுடன் உரையாடினார். பிரச்சினைகளை கேட்டறிந்த பின் மக்கள் மத்தியில் கருத்துத்தெரிவித்த போது, நல்லாட்சியை கொண்டுவர உழைத்த சிறுபான்மை மக்களை இன்று நடுத்தெருவில் நின்று போராட்டம் நடாத்துவதற்கு புதிய ஆட்சி தள்ளியுள்ளது.

வடக்கு, கிழக்கிலே தமிழ் பேசும் மக்களது காணிகள் பெரும்பாலானவை கையகப்படுத்தப்பட்டு இன்று மக்களிடம் கையளிக்கபடாமல் தொடர்ந்து இழுத்தடிக்கப்படுகின்றது.கேப்பாபிலவு மக்களின் 482ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட பூர்வீக காணிகளில் இராணுவம் இன்னும் நிலைகொண்டிருப்பது வேதனையானது, இந்த காணிகள் விடுவிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்க மேற்கொள்ள முயற்சிகளுக்கு எனது பூரணமான பக்களிப்பும் உண்டு, அத்துடன் இந்த மக்களின் வேதனைகளில் நானும் பங்கேற்கிறேன் என்றும் அமைச்சர் கூறினார், அத்துடன் அசாத் சாலி, பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் ஆகியோரும் இங்கு கருத்துத்தெரிவித்தனர்.

தங்களது போராட்டத்துக்கு ஆதரவளிக்க வந்த அமைச்சர் குழாத்துக்கு நன்றிதெரிவித்த சமூக வேவையாளர் பரமசிவம் , கடந்த அரசில் 1030ஏக்கர் காணியை முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுவித்துத்தந்த அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.இந்த பிரச்சினையிலும் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என பாதிக்கப்பட மக்கள் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -