வில்பத்துவில் முஸ்லிம்கள் பூர்வீகமாக வாழும் பிரதேசமான கரடிக்குழி, பாலைக்குழி மற்றும் மறிச்சுக்கட்டி போன்ற பிரதேசங்களை வன பரிபாலனத் திணைக்களத்தினால் சுவீகரிப்பதற்கான வர்த்தமானி பிரசுரத்தை மீள்பரிசீலனை செய்து நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறு கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட குழுவினர் இன்று (3) ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்து கலந்துரையாடினர்.
வனபரிபாலன திணைக்கள மேலதிகாரிகள், சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஆகியோருடன் அமைச்சரின் சார்பில் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான், வடமாகாணசபை உறுப்பினர் ரயீஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் முயினுதீன், நியாஸ், முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.