சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ள 90 நாள் பொதுமன்னிப்பு காலத்தில், சவுதியின் கிழக்கு பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்களுக்காக விசேட நடமாடும் சேவை ஒன்றை நடத்தவுள்ளதாக ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த நடமாடும் சேவை நாளைய தினம் முதல் அல் கொபார் நகருக்கு அருகில் உள்ள கோல்டன் ரியூலீப் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. கடவுச்சீட்டு, அல்லது அதன் இலக்கம், அடையாள அட்டை ஆகியவற்றில் ஒன்றுடன் நடமாடும் சேவைக்கு சமுகமளிக்கும் இலங்கையர் அனைவரும் பதிவு செய்யப்படுவார்கள் எனவும் தற்காலிக கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் எனவும் தூதரகம் அறிவித்துள்ளது.
தற்காலிக கடவுச்சீட்டை பெற 190 சவுதி ரியால்களை செலுத்தி பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும். 0542069121, 0542069140 மற்றும் 0542069184 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களை அறிந்து கொள்ள முடியும் எனவும் இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
த.வின்