கல்முனை எம்.ஐ.சம்சுதீன்-
சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்மாப்பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபையினரின் ஏற்பாட்டில் சட்டஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிகச் செயலாளராக பதிவிஉயர்வு பெற்றுச்சென்ற ஏ.எல்.எம்.சலீம் அவர்களைப் பாராட்டும் வைபவம் சீ.பீரிஸ் ரெஸ்ரரண்ட் மண்டபத்தில் நம்பிக்கையாளர் சபைத்தலைவர் வை.எம்.ஹனிபா தலமையில் நடைபெற்றது.
தலைவர் பிரதம அதிதியை மாலை அணிவித்து வரவேற்பதையும் தலமை உரையாற்றுவதையும் அம்பாரை மாவட்ட உலாமா சபைத்தலைவர் எஸ்எச்.எம்.ஆதம்பாவா, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா , சி.மு.காங்கிரஸ் தவிசாளர் ஏ.எல்.எம்.ஏ.மஐீட் ஆகியோர்கள் உரையாற்றுவதையும் , ஞாபகச்சின்னம் வழங்கி வைப்பதையும் தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தின் கி.மா.காரியாலய பொறுப்பாளர் எஸ்.எம்.ஏ.லத்தீப் பொண்ணாடை போர்த்தி கௌரவிப்பதையும் படத்தில் காணலாம்.