புதுடெல்லி: ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரயில்கள் மற்றும் ரயில் நிைலயங்களில் வெடிபொருட்கள் மற்றும் போதை மருந்துகளை கண்டுபிடிப்பதற்கு மட்டுமின்றி, திருட்டு, நாசவேலைகளில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் மோப்ப நாய்களின் பங்கு மகத்தானது. டாபர்மேன், ஜெர்மன் ெஷப்பர்டு போன்ற நாய் இனங்கள் 20,000 முதல் 30,000 வரை விலை கொடுக்கப்படுகிறது.
தற்போது ரயில்வே நாய் படைப்பிரிவில் 332 நாய்கள் உள்ளன. இது, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையான 459ஐ காட்டிலும் குறைவாகும். மேலும், தற்போது டெல்லியில் பஸ்தி மற்றும் சென்னையின் போத்தனூரில் மட்டுமே நாய் பயிற்சி மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் அதிகபட்சம் 23 நாய்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்க முடியும். எனவே, நாய் இனப்பெருக்கம் மற்றும் பயிற்சி மையங்களை ரயில்வே விரைவில் தொடங்க உள்ளது. தற்போது, ைமயங்கள் தொடங்குவதற்கான பொருத்தமான இடத்தை ரயில்வே தேர்வு செய்து வருகிறது என்றார்.
இந்தியா. (தினகரன்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -