தீவிரமாகப் பரவியுள்ள இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சல் - மருந்துகளுக்கு தட்டுப்பாடு

நாடெங்கும் தீவிரமாகப் பரவியுள்ள இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சலுக்கான மருந்துகளுக்கு அரச வைத்தியசாலைகளிலும் தனியார் மருந்தகங்களிலும்(பார்மஸி) பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் வயோதிபர்களை இலகுவாகத் தாக்கும் இந்த நோய்க்குரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் அது நிமோனியா காய்ச்சலுக்கு வழிவகுப்பதுடன் மரணத்தையும் ஏற்படுத்தும் என்று வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வைரஸ் காய்ச்சலுக்கான அத்தியாவசிய மருந்தான 'டெமிப்லு' எனும் மருந்து (கெப்ஸ்யூல்) அரச வைத்தியசாலைகளில் தட்டுப்பாடாக இருப்பதுடன், குறிப்பிட்ட சில தனியார் மருந்தகங்களில் அந்தக் மாத்திரை 600 ரூபா வரை விலைபோகின்றது.

இதன் காரணமாக சாதாரண மக்கள் இந்த மருந்தை பார்மஸிகளில் வாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது எனவும், சுகாதார அமைச்சு இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு தீர்வொன்றை வழங்கவேண்டும் எனவும் வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -