பாறுக் ஷிஹான்-
வடக்கு கிழக்கில் நாளை (27) வியாழக்கிழமை நடைபெறவுள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர்சங்கம் தனது பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
வடக்கு கிழக்கில் பொதுமக்களால் கடந்த சில மாதங்களாக பல காரணங்களை முன்னிட்டு நடாத்தப்படுகின்ற தொடர் போராட்டங்களினை அரசு கவனத்தில் எடுக்கவில்லை. எனவே அரசின் கவனத்தையும் சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்க்கும் முகமாக நாளை வடக்கு கிழக்கு தழுவிய முழு அடைப்புக்குப் போராடும் மக்களிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனவே அவர்களின் கோரிக்கைக்கு பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தினராகிய நாமும் எமது முழு ஆதரவினையும் வழங்குகின்றோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.