படமோட்டிகளுக்குப் பாடம் புகட்ட தலைவன் புறப்பட வேண்டும்.!

வெறும் வெற்றுக் கோசங்களும் காற்றில் கலக்கும் வாக்குறுதிகளுமே முஸ்லிம் அரசியலாயின. அதை விடுத்து எமது பிராந்திய அபிவிருத்தி, இன முன்னேற்றம் தொடர்பில் எல்லாம் சிந்திக்கும் சித்தாந்தம் சிறைபிடிக்கப்பட்டுவிட்டதோ தெரியாது. அதிலும் குறிப்பாக எமது கிழக்கு மாகாண மக்கள் அரசியலில் , கண்ட கண்டவர்கள் எல்லாம் வந்து கரப்புக்குத்தும் அளவுக்கு சோடைபோயுள்ளது.

கிழக்கு மக்களுக்கென இருக்கின்ற சுய கெளரவம், சுய மரியாதை என்பவற்றை யார் யாருடமெல்லாம் அடகு வைக்க முடியுமோ அவர்களிடமெல்லாம் அடகுவைத்தாகிவிட்டது. கிழக்கை கிழக்கான் ஆள வேண்டும் என்ற கோசம் அரசியல் ஆலை அஷ்ரபுடன் ஆட்டம் கண்டுவிட்டது. கிழக்குக்கு வெளியில் இருந்து வந்து கிழக்கை ஆட்சி புரிந்தவர்களிடம் இருந்து ,மு.கா என்ற பேரியக்கத்தினால் கிழக்கை சுமார் ஒரு தசாப்த காலம் மீட்டெடுத்தார் பெருந்தலைவர். ஆனால் பிற்பட்ட காலம் முழுதும் மாற்றமான பல்லவிக்குத் தலையசைக்கும் கோயில் மாடுகளானோம்.

எமது இருப்பில் சிலர் வாடியடிப்பானது வெறும் பிரதேசவாதம் என்ற கேடையத்தைக் கொண்டே தடுக்கி விழுமளவிற்கு அடிக்கற்களாயின. வெறும் பூச்சாண்டி அரசியல் மாத்திரமேயானது. எமது வாக்குகளைக் கொண்டு பெற்ற தேசிய பட்டியல் எம்மையே விலைபேசிப் பிரித்தாள்கிறது. இருந்தும் பொத்துவில் மக்களின் விழிப்பும், துரத்தியடிப்பும் கிழக்குக்கான தலைமைத்துவம் ஒன்றின் தேடலுக்கான அத்திவார முன்னெடுப்பாகவே கொள்ளவேண்டும்.

வெற்றுப்படங்காட்டுதல்களும் அனாதரவான மக்களுக்கான ஐம்பதாயிரம் ரூபா பணமுமே இன்று அரசியலானது. அம்பாரை மாவட்ட பொத்துவில் வாக்குறுதி தொட்டு மருதமுனை மக்களின் 65 மீட்டர் வீட்டுத்திட்ட வாக்குறுதிகள் வரை அனைத்துமே நிறைவேறா நிஜங்களாயின.

கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலையும் சீலமோ! அல்லது முற்றத்து மல்லிகை மணக்க மறுக்கிறதோ! கிழக்கை தலைமையேற்று அபிவிருத்தி பாதையில் செலுத்தக்கூடிய தலைவனை தாங்க கிழக்கு மக்கள் தயாராக வேண்டும். முடங்கியிருந்த கிழக்கின் கோசம் வலுக்க தலைவன் அதாவுல்லாவை தட்டிக்கொடுக்க வேண்டும். எமது மண்ணைக்காக்க பழைய அதே உத்வேகத்துடன் தலைவன் புறப்படவேண்டும். படமோட்டிகளுக்கெல்லாம் பாடம் புகட்டவேண்டும்.
சிபான் பீ.எம்,
மருதமுனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -