பேராதனைப் பல்கலைக்கழகம் நடத்தும் முதலாம் வருட 100 சதவீத மட்ட வெளிவாரி கலைப் பட்டதாரி மாணவர்களுக்கான தொடர் தொலைக் கல்வி பரீட்சைகள், (னுளைவயnஉந யனெ ஊழவெiரெiபெ நுனரஉயவழைn) காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழகம் பரீட்சார்த்திகளுக்கு அறிவித்துள்ளது.
இப்பரீட்சைகள், ஏப்ரல் 08ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் 30ஆம் திகதி முடிவடையும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
நாடு முழுவதிலும் ஏஎச்1 என்1 நோய் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் தொற்று நோய்ப் பிரிவு அறிவித்துள்ள நிலையில் பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் பரவிவரும் ஒரு வகைக் காய்ச்சல் காரணமாக அப்பல்கலைக் கடந்த 04ஆம் திகதி தொடக்கம் மூடப்பட்டு பல்கலைக் கழக விடுதிகளிலிருந்த மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பேராதனைப் பல்கலைக் கழக மாணவர்கள் சுமார் 500 இற்கு மேற்பட்டோர் பல்கலைக் கழக மருத்துவ நிலையத்தில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றதையடுத்து நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பல்கலைக் கழகத்தின் பரீட்சைகள் உட்பட சகல விதமான கல்வி நடவடிக்கைகளையும் நிறுத்துவதாக அப்பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
பேராதனைப் பல்கலைக் கழக தொடர் தொலைக் கல்வி நிலையம் நடாத்தும் கலைமானிப் பட்டப்படிப்பின் பரீட்சைகள் நாடெங்கிலும் வௌ;வேறு பரீட்சை மத்திய நிலையங்களில் இவ்வாரம் முதல் நடைபெறவிருந்தன.
மட்டக்களப்பில் ஆசிரியர் கலாசாலை, கல்லடி, முகத்துவாரம் விபுலாநந்தா வித்தியாலயம், மட்டக்களப்பு புனித தெரேசா வித்தியாலயம் மற்றும் கல்லடி, உப்போடை சிவானந்தா தேசியக் கல்லூரி ஆகியவற்றில் நேர அட்டவணைப்படி நடைபெறவிருந்தன.
இப்பரீட்சைகளும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆனைத்துப் பீடங்களும் மூடப்பட்டு அவற்றின் சகலவிதமான கல்வி நடவடிக்கைகளுமே காலவரையறையின்றிப் பிற்போடப்பட்டுள்ளன.
இதனால் மாணவர்களுக்கு ஏற்பட்ட இடைஞ்சல்களுக்கு பேராதனைப் பல்கலைக்கழகம் வருத்தம் தெரிவித்துள்ளதோடு புதிய பரீட்சைத் திகதிகள் கால அவகாசத்தோடு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.