ஊடகப்பிரிவு-
மீள்குடியேற்ற செயலணியினனால் வழங்கப்படவுள்ள வீடுகளுக்கான புள்ளி வழங்களில் அநீதி இழைக்கப்பட்டிருக்குமாயின் அதிகாரிகளிடம் தயக்கமின்றி அதற்கான நீதியை கேட்டும் கிடைக்கவில்லையாயின் குறித்த விடையம் தொடர்பிலான உடன் நடவடிக்கைகளை தாம் முன்னெடுப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.
மீள் குடியேற்ற செயலணியின் உப குழுவில் இணைக்கப்பட்டுள்ள கே.கே.மஸ்தான் ஜனாதிபதியின் விசேட பணிப்பின் பெயரில் கிராமம் கிராமமாக சென்று மக்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக நேற்று மன்னார் அடம்பன் பகுதியிலுள்ள கிராமங்களுக்கு சென்று மக்களுக்கு தெளிவுபடுத்தியதுடன் குறித்த வீட்டுத்திட்டத்தில் சில குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாக மக்களால் முறையிடப்பட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் குறித்த வீட்டுத்திட்டம் தொடர்பான புள்ளிகளையும் பெயர்களையும் பொது இடங்களில் ஒட்டுமாறும் இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களது பிரச்சினைகள் வெளிக்கொணரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் நல்லாட்சியில் எந்த பொதுமகனும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் நானும் உறுதியாக இருக்கின்றேன் எனினும் என் அரசியல் பிரவேசத்திற்கு முன்னரான குறைகளை என்னிடம் அதிகம் சொல்லப்படுதாக தெரிவித்தார்.
என்னைப்பொறுத்த வரையில் என் மனசாட்சிக்கு ஏற்ப எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை வெளிப்படைத்தன்மையுடையதாக செய்ய வேண்டும். எனக்கு அரசியல் மூலமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எந்த தேவையும் கிடையாது எனவே மக்களுக்கு எது கிடைக்கப்படுகிறதோ அது மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்கப்படவேண்டும் என்பதிலேயே நான் அவதானமாக இருக்கின்றேன்.
என்னுடைய சேவைகள் எனக்கு ஆதரவு வழங்கிய மக்களுக்கு மட்டுமல்ல மாறாக எல்லா மக்களுக்கும் கிடைக்கப்படுபவை கொடுக்கப்படும் இவ்வாறு கிராமம் கிராமமாக செல்லும்பொழுதுதான் தெரிகிறது தமக்கு கிடைக்கப்பெறுவவேண்டிய பல சலுகைகள் அரசியல் மூலமாக இல்லாமலாக்கப்பட்டிருக்கின்றது என்று எனவே இனியும் அந்த தவறுகள் நடக்க இடமளிக்கப்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.