அமைச்சரவை மாற்றங்கள் தொடர்பில் கடந்த வார அமைச்சரவை கூட்டத்தின்போது தீவிர வாக்குவாதம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய அமைச்சர்கள் இதன்போது தாம் பதவியில் இருந்து நீக்கப்பட்டால், மஹிந்த ராஜபக்சவின் கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்துக்கொள்ளப்போவதாக எச்சரித்துள்ளனர்.
அமைச்சரவை மாற்றங்கள் தொடர்பில் கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளியாகிவருகின்றபோதும் அது பல்வேறு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இரண்டு வாரக்காலத்துக்குள் அரச நிர்வாகத்தின் மாற்றங்களை செய்யப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபாலவும் அண்மையில் அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.