புத்தாண்டு காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலையில் பொலிஸார் விசேட செயற்பாட்டு நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த காலப்பகுதியினுள் போதைப்பொருள் கொண்டு செல்வதற்காக அதிவேக நெடுஞ்சாலை பயன்படுத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த விசேட கண்கானிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அதிவேக வீதிகளில் நெடுஞ்சாலை பகுதிகளில் போதைப்பொருள் சுற்றிவளைப்பிற்காக விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பயிற்சி பெற்ற பொலிஸ் பிரிவின் நாய்களும் இந்த நடவடிக்கைகளுக்காக ஈடுப்படுத்தபட்டுள்ளது.