அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை..!

ணு ஆயுத தாக்குதல் மூலம் திருப்பி தாக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள வட கொரியா, கொரிய பிராந்தியத்தில் அமெரிக்கா ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என எச்சரித்துள்ளது.

வட கொரியாவை நிறுவிய அதிபர் கிம் இல்-சொங்கின் 105வது பிறந்த நாள் நினைவு கொண்டாடப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

வட கொரியாவின் வலிமையை வெளிகாட்டும் வகையில், படைவீரர்கள், பீரங்கிகள் மற்றும் பிற ராணுவ ஆயுதங்கள் அனைத்தும் தலைநகர் பியாங்யோங்கில் நடைபெற்ற அணிவகுப்பில் பங்கேற்றன.

இன்னொரு அணு ஆயுத சோதனைக்கு தற்போதைய தலைவர் கிம் ஜாங்-உன் ஆணையிடலாம் என்கிற ஊகங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

"முழுமையானதொரு போர் தொடுக்கப்பட்டால், முழுமையானதொரு போரால் திருப்பி தாக்கி பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று வட கொரிய ராணுவ அதிகாரி சோய ரொங்-ஹெய தெரிவித்திருக்கிறார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -