நண்பர்களில் உள்ள சில துரோகிகளை எவ்வாறு அடையாளப்படுத்துவது?

தூரத்தில் இருக்கின்ற எதிரிகளைவிட அருகில் இருக்கின்ற துரோகிகளே மிகவும் ஆபத்தானவர்கள். அதனால் அருகில் இருப்பவர்களிடமிருந்து நாம் எப்போதும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

எமக்கு ஆபத்தினை தரக்கூடியவர்கள் எப்படிப் பட்டவர்களாக இருப்பார்கள்? பார்ப்பதற்கு நல்லவர்கள் போன்று காணப்படுகின்ற இவர்களை, உடல் அங்கங்களைக்கொண்டு நாம் எப்படி அடையாளபடுத்த முடியும்?

“கட்டையன், நெட்டையன்............

கண்கெடு பொட்டயன்.........

கபடமே குடிகொண்ட செம்பெட்டயன்..........

கூனன், குருடன், தெத்தன், மொடவன், மின்னியன், கொன்னயன்...........

இவர்களை நம்பினால் நாசமே நாசம்.”

இங்கே உயரத்தில் குறைந்தவரை குள்ளனாகவும், நெட்டையன் என்பது உயரமாக இருப்பான் ஆனால் அவனது உடல் அகலமாக இல்லாது உல்லியாக இருக்கும்.

செம்பட்டையன் என்பது கறுத்த முடி அல்லாத செம்பட்டை முடியினை குறிக்கும்.

அத்துடன் கூனன் என்பது முதுகு வளைந்தவனாக இருப்பான் அல்லது நிமிர்ந்து நடக்காது பூமியை பார்த்து நடக்கின்றவனாக இருப்பான்.

மின்னியன் என்பது பல வகைப்படும். அதில் பார்ப்பதுக்கு மிகவும் பயங்கரமாக அல்லது அருவருப்பாக தெரிகின்ற கண்களை உடையவர்களே மிகவும் ஆபத்தானவர்களாக இருப்பார்கள்.

பழுப்பு நிறம் அல்லாத பல ஆபத்தான அடையாளங்ககள் கண்ணில்தான் உள்ளது. அத்துடன் கண் பெரிதாக இருக்கின்றவர்கள் மிகவும் பொறாமைக்காரர்கள் என்ற கருத்தும் உள்ளது.

கொன்னயன் என்பது கொன்னி கொன்னி பேசுபவனை குறிக்கும்.

சிலர் இருக்கின்றார்கள் மிகவும் நளினமாகவும், அருமையாகவும், வசியப்படுத்துகின்ற மாதரி மற்றவர்களுடன் பேசுவார்கள். இப்படிப்பட்டவர்களும் ஆபத்தானவர்களே!

இதில் சிலர் ஒரு அடையாளத்தையும், சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட பல அடையாளங்களையும் கொண்டவர்களாக காணப்படுவார்கள்.

எனவே இப்படியான ஏதாவதொரு உடல் அடையாளம் உடையவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்று நான் கூறவில்லை.

எமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.

இதில் விதிவிலக்கானவர்களும் உண்டு. அதாவது இப்படிப்பட்ட உடல் அடையாளங்கள் இருந்தும் மிகவும் அரிதாகவே நல்லவர்கள் காணப்படுவார்கள்.

இப்படிப்பட்டவர்கள் யார் யார் என்று மிகவும் அவதானமாக இருந்தால் அவர்களிடம் இருந்து வரும் ஆபத்துக்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும். அதற்காக இவர்களைவிட்டு விலகி இருக்கவேண்டும் என்பதல்ல. அவதானமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும் என்பதுதான் எனது கருத்தாகும்.

இது இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளதா என்று சிலர் கேள்விகள் கேட்க கூடும். அதற்கு நான் பொறுப்பல்ல. ஏனென்றால் இது முன்னோர்களது அனுபவரீதியிலான வாக்கு என்று மட்டும்தான் என்னால் கூறமுடியும்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -