அஸ்ஸஹீட் தாவூத், புஹாரி ஞாபகார்த்த உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஆரம்பம்.!

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
றாவூர் இளம்தாரகை விளையாட்டுக்கழகம் (YSSC Young Strar Sports Club) நடாத்தும் கிழக்கு மாகாணம் தழுவிய அஸ்ஸஹீட் தாவூத் மாஸ்ட்டர் & புஹாரி விதானையார் ஞாபகார்த்த உதைப்பந்தாட்ட சுற்றுபோட்டியின் அறிமுக நிகழ்வானது 11.04.2017 செவ்வாய் கிழமை ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் வரலாற்று பதிவாக இடம் பெற்றமை YSSC கழகத்தின் வரலாற்றில் மைல்கல்லாக பார்க்கப்பட்ட விடயமாகும்.

குறித்த வரலாற்ரு சுற்றுப்போட்டியின் ஆரம்ப போட்டியினை ஏறாவூர் YSSC விளையாட்டுக்கழகத்தின் இஸ்தாபக தலைவர்களில் ஒருவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செய்ட் அலி ஸாஹிர் மெளலான பிரதம அதிதீயாக கலந்து கொண்டு இன்று 15.04.2017 ஆரம்பித்து வைத்தார். ஆரம்ப போட்டியில் மட்டக்களப்பு சென் இக்னேசியஸ் விளையாட்டுக்கழகமும் ஏறாவூர் ஜிந்தாபாத் விளையாட்டுக்கழகமும் பலப்பரீட்ச்சை நடாத்தியல் ஒன்றுக்கு பூச்சியம் எனும் கணக்கில் இக்னேசியஸ் விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டியது.

கிழக்கு மாகாணத்தின் வரலாற்றில் என்றும் இல்லாத சாதனையாகவும், வரலாற்று பதிவாகவும் இடம் பெற உள்ள இச் சுற்றுப்போட்டியில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் உள்ள முக்கிய 32 விளையாட்டு கழகங்கள் பலப்பரீட்ச்சையில் பங்குபற்ற உள்ளன. அத்தோடு வெற்றியீட்டும் கழகங்களுக்கு பெறுமதி மிக்க பரிசில்களும் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட உள்ளதுடன் 

வரலாறு படைக்கவிருக்கும் அஷ்ஷஹீட் & தாவூத் மாஸ்ட்டர் & புஹாரி விதானையார் மாபெரும் உதைப்பந்தாட்ட வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டிக்கான பூரண அனுசரணையினை ஓட்டமாவடியில் உள்ள சமூக ஆர்வலரும் முன்னாள் கல்குடா தொகுதி முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் சாட்டோ வை.எல்.மன்சூர் வழங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வின் காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -