அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை-நிலாவௌி பிரதான வீதி அலஸ்தோட்டம் பகுதியில் இன்று (10) பிற்பகல் 1.30 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் வேன் மோதி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை.முருகாபுரி இலக்கம் 02இல் வசித்து வரும் கே.பிரியதர்ஷனி (29வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலையிலிருந்து நிலாவௌி சென்ற வேன் அதே பக்கத்தினூடாக சென்ற மோட்டார் சைக்கிளை முந்திச்செல்ல முற்பட்ட போது அலஸ்தோட்டம் கடற்கரைப்பகுதியிலிருந்து திருமலை நகருக்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்த பெண்ணுடன் மோதியதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த விபத்துடன் தொடர்புடைய சாரதியை கைது செய்துள்ளதாக உப்புவௌி பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்ட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் உப்புவௌி பொலிஸார் தெரிவித்தனர்.