கிழக்கில் வீடற்றோர் பிரச்சினையைத் தீர்க்குமாறு வீடமைப்பு அமைச்சரிடம் கோரிக்கை.!

கிழக்கில் வீடற்றோரின் பிரச்சினையைத் தீர்க்க ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ’ நசீர் அஹமட் சமுர்த்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிழக்கில் பலர் யுத்தம் மற்றும் இயற்கைப் பேரழிவுகளின் போதும் வீடுகளை இழந்த நிலையில் வாழ்ந்து வருவதாகவும் அவர்களுக்கு உரிய தீர்வுகளை வழங்க முன்வர வேண்டியது அவசியம் எனவும் கிழக்கு முதலமைச்சர் இதன் போது வீடமைப்பு அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் கிழக்கு முதலமைச்சர் ஆகியோர் திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்தரையாடிய போதே இந்த கோரிக்கை விடுக்கப்படுள்ளது,

மட்டக்களப்பு திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசங்களால் பலர் வீடுகளை இழந்தும் சிலரது வீடுகள் சேதமடைந்துமுள்ளமையினால் அவர்களுக்கும் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளதுடன் அது தொடர்பிலும் அமைச்சர் கவனம் செலுத்தி கிழக்கு மாகாணத்தின் வீடமைப்புத் துறையில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க அமைச்சர் சஜித் பிரேமதாச முன்வர வேண்டும் எனவும் கிழக்கு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் கிழக்கில் பலருக்கு வீட்டு வசதிகள் மற்றும் வீட்டுத் திருத்த வேலைகளுக்கு மக்கள் இலகுவில் உதவிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய பொறிமுறையொன்று கிழக்கை மையப்படுத்தி உருவாக்க வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -