ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
திருகோணமலை கிண்ணியா- அஹமட் லேன் பகுதியில் 21 வயதான இளைஞன் மீது கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் கிண்ணியா அஹமட் லேன் பகுதியைச் சேர்ந்த ஏ.முஹம்மத் முஹ்ஸித் என்பவரே படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
கத்திக்குத்துக்குள்ளானவரும் அவரது சகபாடிகளான மற்றுமிருவரும் மது அருந்திய நிலையில் உல்லாசமாக அளவளாவிக் கொண்டிருக்கும் போது தர்க்கம் ஏற்படவே கத்திக்குத்தில் ஈடுபட்டதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கத்திக்குத்தில் ஈடுபட்டவரைத் தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.