நீங்கள் மாணிக்­க­மடு சிலை வைப்பு விடயத்தில் தயங்குவது ஏன் ?

ம்­பாறை, இறக்­காமம் பிர­தேச பிரி­வுக்குட்­பட்ட மாணிக்­க­மடு பிர­தே சத்தில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 29 ம் திகதி ஒரு சில பௌத்த மத குருமார்களால் புத்தர் சிலை வைக்கப்பட்டன

பின்னர் அந்த இடத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அக்கட்சி பிரதியமைச்சர்கள் ,பாராளமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் சென்றனர் அது போல ஏனைய ஒரு சில கட்சி உறுப்பினர்களும் சென்று அங்கிருந்த முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடலும் நடைபெற்றன

இந்த சம்பவத்துக்கு பின்னர் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது அக் கூட்டத்தில் இறக்காம மாணிக்க மடு புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக சூடு பிடித்த போது அமைச்சர் தயா கமகே ஒரு சில நச்சு கருத்துக்களை கூறினார்

கல்முனை ,பொத்துவில் தீஹவாபிக்கே சொந்தம் எங்கு தோண்டினாலும் புத்தர் சிலைவரும் ,புத்தர் சிலை வைக்க முடியாதென்றால் அதற்கு என்னால் உடன்பட முடியாது.

முடியாவிடின் இந்த அமைச்சுப்பதவியை வீசிவிட்டு வீட்டுக்கு செல்வேன். அமைச்சு ஒன்றும் எனக்கு பெரிதல்ல என அமைச்சர் தயாகமகே இனவாத கருத்துக்களை கூறினார் பின்னர் அவ்விடத்தில் மு .கா .பாராளமன்ற உறுப்பினர் மன்சூருக்கும் தயாகமகேவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு அக் கூட்டம் பின்னர் அமளி துமளியில் முடிவடைந்தன

பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பிரதியமைச்சர் , பாராளமன்ற உறுப்பினர்கள் பலரும் தயா கமகவின் கருத்தை எதிர்த்து ஊடகத்தில் அறிக்கைகளை விட்டனர்

பின்னர் இந்த பிரச்சினை நீதிமன்றம் சென்றது சட்டம் கடமையை செய்யும் என மக்களும் .சில அரசியல் வாதிகளும் ஓரளவு திருப்தியடைந்தனர்

நீதிமன்ற தீர்ப்புக்கள் வரும்வரை யாரும் அத்துமீறி நுழைய கூடாது என தீர்ப்பு வழங்கப்பட்டது


ஒரு சில தினங்களுக்கு முன் சட்டத்தை மதிக்காது மீண்டும் ஒரு சில பௌத்த மத குருமார்கள் அங்கு சென்று கலவரத்தை உண்டாக்கியுள்ளார்கள் இதனால் மக்களை மீண்டும் பதற்றத்தில் உள்ளனர் அவ்விடத்துக்கு முகாவின் கிழக்கு மாகாண சபை அமைச்சர்
நசீர் ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஆரிப் சம்சுதீன் ,தவம் போன்றவர்கள் சென்று பிரச்சினையை சுமுகமாக பேசி தீர்த்தனர்
விடயத்துக்கு வருகின்றேன்.

அன்று தொடக்கம் இன்றுவரை அமைச்சர் ரிசார்ட் பதுறுதீன் வாய் மூடி மௌனியாக இருப்பது மக்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்புகின்றன பல விடயங்கள் தெரிந்த ஆனந்த தேரர் மற்றும் பல தேரர்களுடன் பல மணி நேரம் சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேச முடியும் என்றால் ஏன் இந்த இறக்­காமம் பிர­தேச பிரி­வுக்குட்­பட்ட மாணிக்­க­மடு பிரச்சினை தொடர்பாக ஏன் பேச முடியவில்லை ?

7 மாதங்கள் கடந்தும் இது தொடர்பாக அமைச்சரினால் இனவாத கருத்தை கக்கும் அமைச்சர் தயா கமகேவுக்கு எதிராக ஏன் பேசவில்லை ?


கல்முனை ,பொத்துவில் தீஹவாபிக்கு உரியதா அமைச்சர் தயாகமகே
கூறியதை ஏற்று கொள்கின்கிறீர்களா ?

வில்பத்து பிரச்சினையில் வீரத்தை காட்டி அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நீங்கள் மாணிக்­க­மடு சிலை வைப்பு விடயத்தில் தயங்குவது ஏன் ?

இறக்காம பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் உணவு ஒவ்வாமையின் காரணமாக ஏற்பட் ட உயிர் இழப்புக்களை பார்வை இட அவசரமாக வானூர்தி மூலம் வந்து அம் மக்களுக்கு உதவிய நீங்கள் மாணிக்­க­மடு சிலை வைப்பு விடயத்தில் மாத்திரம் தயங்குவது ஏன் இன்னும் உங்களது காதுகளுக்கு சிலை விவகார பிரச்சினை வந்தடையவில்லையா ?

நாட்டை பல மிக்க அதிகாரத்தோடு ஆண்ட முன்னாள் ஜனாதிபதியை தூக்கி வீசிய நீங்கள் சிலை வைப்பு சூத்ரதாரி தயா கமகே விடயத்தில் மௌனிப்பது சமூகத்துக்கு செய்யும் மிகப்பெரிய அநீதியாகும்.

கடந்த தேர்தலில் அம்பாறை மாவட்ட மக்கள் உங்களையும் ,உமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு 33000 வாக்குகளை
வழங்கினார்கள் அதில் இறக்காம மக்களுடைய வாக்குகளும் உள்ளன
அனைத்து கட்சிகளுடன் இணைந்து செயற்படுங்கள் இல்லையெனில் நாளை அனைத்து முஸ்லிம் ஊர்களிலும் புத்தர் சிலைகளை வைத்து
முஸ்லிம் மக்களை வீண் வம்புக்கு இழுத்து கடந்த ஆட்சியில் அழுத்கம கலவரம் உருவானது போல அம்பாறை மாவட்டத்திலும் உருவாகும் என்பதை உணரந்துகொள்ளுங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -